18 January 2013

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சைப் பெருவுடையார் கோயில் - ஒரு கோவிலில் பிரமாண்டத்தை காட்ட முடியுமா?? முடியும் என்பதற்கு தஞ்சை கோவில் மிகப்பெரும் எடுத்துக்காட்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் ஐந்து [1004AD - 1009AD] ஆண்டுகளில் இந்த பிரம்மாண்டமான  கோவில் கட்டிமுடிக்கப்பட்டது என்பதை நம்பவே நமக்கு சில நிமிடமாகும். இக்கோவிலின் விமானம் 216 அடி உயரமானது. ஒரே கல்லால் செதுக்கபட்ட 81 டன் எடையுள்ள கலசம் கோவிலின் உச்சியில் இருப்பது உலகில் வேறு எந்த கோவிலுக்கும் இல்ல மிகப்பெரும் சிறப்பு. இதை போன்றே ஒரே கல்லால் வடிக்கப்பட்ட 16அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட 20 டன் எடையுள்ள நந்தி வருபவர்களை வரவேற்பது கூடுதல் சிறப்பு. இன்றளவிலும் இந்தியாவின் மிகபெரிய கோவிலாக திகழ்வது தமிழர் அனைவர்க்குமே பெருமையான ஒன்று.

வெறும் 10 கற்களை துடைத்து வைத்து அதை "stonehenge " என்று பெயரிட்டு அதை பார்க்க கட்டணம் வசூலித்து கொண்டிருக்கிறான் வெள்ளைக்காரன் அனால் இந்த மாபெரும் பொக்கிசத்தை பாதுகாக்க தெரியாமல், அதன் பெருமை சிறுதும் புரியாமல், நமது மாண்புமிகு பொதுமக்கள் இக்கோவிலின் சுவர்களில் சிறுநீர் கழிப்பதும், கோவிலின் வெளிப்புற அகழியில் அசிங்கபடுதுவதும் காணசகிக்காத, ஏற்று கொள்ள முடியாத துயரம்.

பொதுவாக மனிதன் மற்றவர்கள் பெருமையை தான் ஏற்றுகொள்ள மறுப்பான் அனால் தமிழன் மட்டும் தான் தன்னுடைய பெருமையையே ஏற்று கொள்ள மறுக்கிறான்.


 பிரபு

நாம் கண்டிபாக

சிந்தை கலங்கிய
விந்தை மனிதர்கள்...

சின்னஞ்சிறு கதைகள் பேசி
சிரித்து நடிக்கும் 
சிறந்த நடிகர்கள் இவர்...

எண்ணமெல்லாம் வண்ணம் பூசி
வாய்ஜாலம் காட்டும்
வார்த்தை வித்தகர்கள் இவர்...

மனதில் உள்ளதை மறைத்துவிட்டு 
மாய வார்த்தைகள் பேசும்
மந்திர மாயாவாதிகள் இவர்...

கண்டத்தில் நஞ்சு வைத்து
கலகம் செய்யும்
கன்னியவான்கள் இவர்...