22 October 2008

சொந்தங்களின் சோக நிலை

http://www.tubetamil.com/view_video.php?viewkey=81761421d5e1e0c3de25

வெறும் ஐந்தே நிமிடங்கள் இக்குறும்படத்தை பார்த்த எனக்கு கண்கள் குளமாயின, நெஞ்சம் புண்ணாயின. என்னவென்று சொல்வது எம்மக்கள் படும் அவலத்தை பார்த்து. கோர்வையாய் பேச தெரிய வில்லை எனக்கு. விடையும் சொல்ல தெரிய வில்லை எனக்கு.


மற்றவன் வீட்டு மரணத்திற்கு அழாவிட்டாலும் பரவா இல்லை என் வீட்டிலே இவ்வாறான தொடர் மரணங்கள் அதும் கொடும் மரணங்கள் நடக்கும் பொது கூட அமைதியாய் இருந்தால் எப்படி.
என் வீட்டில் உள்ளவர்களை எமனுக்கு காவு கொடுத்து விட்டு எஞ்சி இருப்பவர்களோடு எவ்வளவு நாள் நிமதியாய் காலம் கடத்த முடியும். உறவுகளை தொலைத்து விட்டு இந்தியன் என்று சொல்லி கொள்வதில் எனகென்ன பெருமை இருக்க முடியும்.


தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்த காலம் போய் தமிழன் என்பதை மறைத்து தலையை காப்பற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டு விட்டனரவே எம் ஈழ தமிழ் மக்கள். இருந்தும் தன்மானத்தோடு தமிழின மானம் காக்க வீரத்தோடு போராடும் எம்மக்களை தட்டி கொடுக்க ஆளில்லாமல் தவியாய் தவிக்கின்றனரே ஈழத்து வீரர்கள்.


சினம் கொண்ட சிங்கங்களாய், வீரிய எரிமலையாய் வெடித்து, சூழ்நிலைக்கு ஆயுதம் ஏந்தி போராடும் நம் வீரர்களுக்கு, இருக்கும் தடைகளை நீக்கி ஆதரவு மட்டும் கொடுத்தால் போதுமே, இன படுகொலைக்கு முற்று புள்ளி வைத்து விடலாமே....



முடிவு யார் கையில்??


1) தமிழகத்தில் தன் கட்சியை எப்படி முன்னேற்றுவது என்பதை மட்டும் குறிகோளாய் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் கையிலா?


2) தன் முன்னேற்றம் தன் வீடு என்று சுகமாய் வாழ்ந்து கொண்டு, எந்த கட்சி என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலேயே ஒட்டு போட்டு தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கும் மக்கள் கையிலா??


என்னிடத்திலும் பதில் இல்லை... தெரிந்தவர்கள் சொல்லலாம்.


என் பதிவை படிக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை தயவு செய்து ஈழ தமிழரின் கஷ்டத்தை வெளி காட்டி இருக்கும் இக்குறும்படத்தை பரவ செய்யுங்கள், மற்றவரும் பார்க்க செய்யுங்கள். இனிமேலும் சிந்திக்காமல் இருந்தால் வெறும் வரைபடத்தை வைத்து கொண்டு வருங்காலத்தில் தமிழனின் வரலாறு மட்டும் பேச முடியும்.

பிரபு