23 April 2008

தத்துவம்ஸ் - பகுதி 2

'Dye' ! na மண்டையில போடறது !!!!1

'Die' na மண்டைய போடறது !!!!!!!

------------------------------------------------------------------------------------------------

தண்ணிகுள்ள கப்பல் போனா ஜாலி ....

கப்பல் குள்ள தண்ணி போனா காலி ...

------------------------------------------------------------------------------------------------

யானை மேல நாம உக்கார்ந்தா சவாரி

யானை நம்ம மேல உக்கார்ந்தா ஒப்பாரி!!!!

------------------------------------------------------------------------------------------------

காக்கா காக்கானு கத்தரதால நாம அத காக்கானு கூப்பிறோம்

அப்ப

மாடு மா மானு கத்தரதால அத மாமான்னு கூப்பிட முடியுமா ????

------------------------------------------------------------------------------------------------

ஓட்டப் பந்தயத்துல கால் எவ்ளோ வேகமா ஓடினாலும்

பரிசு என்னமோ கைக்கு தான் கிடைக்கும் .....

இது தான் வாழ்க்கை

------------------------------------------------------------------------------------------------

க்ரீம் biscuitla க்ரீம் இருக்கும்

அப்ப நாய் biscuitla நாய் இருக்குமா???

------------------------------------------------------------------------------------------------

சோடாவ fridgela வச்சு எடுத்தா அது சொல்லின் சோடவா ஆயிடும்

அப்ப

அதே சோடாவ வாஷிங் machinela வச்சு எடுத்த வாசிங் சோடா

ஆயிடுமா ????
------------------------------------------------------------------------------------------------

பச்சை மொளகாயில பச்சை இருக்கும்

அப்ப

குடை மொளகாயில குடை இருக்குமா ???

------------------------------------------------------------------------------------------------

சௌத் இந்தியால நார்த்தங்காய் கிடைக்கும்

அப்ப north இந்தியால சௌதங்காய் கிடைக்குமா ???

------------------------------------------------------------------------------------------------

தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்

அப்ப

பன்னீர பன்னினு சொன்னா நல்லவா இருக்கும் ???

-----------------------------------------------------------------------------------------------

17 April 2008

நீதிக் கதைகள் - பகுதி 2

ஆசைக்கு எல்லை இல்லை!!!!

ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை,குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான்.அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான்.தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது.அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அவ் வண்ணமே ஆவாய்" என்றது.அவன் அரசனாகி விட்டான்.

முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான்.அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.

அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை. "தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது.ஆகையால் என்னை மேகமாக்கிவிடு" என்று வேண்டினான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது.அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.

பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்த பாறையை அசைக்கவே முடியவில்லை. "தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்திவாய்ந்தது எனவே என்னை பாறையாக்கிவிடு" என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான்.அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்த பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது."தெய்வமே பாறையை விட கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு என்றான். தெய்வமும் "அவ்வண்ணமே ஆகுக" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விடடான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும்.ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி.ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.

------------------------------------------------------------------------------------------------

அணில் சொன்ன சேதி!!!

அணில் சொன்ன சேதி கேட்டு மிருகங்கள் கவலையில் உறைந்து போய் நின்றன.

‘‘நிஜமாவா?’’ என்றது மான்.

‘‘ஐயையோ அப்படியா?’’ இது முயல்.

‘‘சே, என்னைவிட தந்திரசாலியா இருக்கிறாங்களே?’’ வியந்தது நரி.

யானை மட்டும் மீண்டும் அணிலிடம் விசாரித்தது. ‘‘நீ கேள்விப்பட்டதை மறுபடியும் தெளிவாகச் சொல்லு!’’ ‘‘இந்த பூமியிலே இனி வாழ முடியாது.செவ்வாய் கிரகத்துலே எல்லா வசதிகளையும் உருவாக்கிக்க முடியும். பூமிக்கு இனி குட்பை சொல்லிட வேண்டியதுதான்னு மனிதர்கள் பேசிக் கொண்டதை நான் கேட்டேன்’’ என்று அணில் சொன்னதைக்கேட்டு மிருகங்கள் சோகத்தில் ஆழ்ந்து போயின. சந்தனக் காட்டில் எல்லா மிருகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன.

நகரில் உள்ள விஞ்ஞானிகளின் ஆய்வுக்கூடத்திற்குத் தினமும் சென்று அணில் தகவல்களைத் திரட்டி வரும். அணிலுக்கு அங்கு ராஜ மரியாதை! விஞ்ஞானிகள் கொடுக்கும் பழம், கொட்டைகளைத் தின்று விட்டு அங்கேயே சுற்றி வரும். அப்போது காதில் விழும் சேதிகளை காட்டுக்கு வந்து மற்ற மிருகங்களிடம் சொல்லும். இதனால் அணில் மீது மற்ற விலங்குகளுக்கும் அலாதியான பிரியம்! சில நாட்களாக அணில் சொன்ன சேதிகள் மற்றவைகளை கவலையடையச் செய்தது. வேற்று கிரகங்கள் பற்றிய மனிதர்களின் ஆராய்ச்சி, அங்கே குடியேற அவர்கள் திட்டமிட்டுவது பற்றி விலங்குகள் பரபரப்பாகப் பேசிக்கொண்டன. இப்போது, ஒரேயடியாக பூமியை விட்டு மனிதர்கள் செவ்வாயில் குடியேறப் போகிறார்கள் என்று அணில் சொன்னதைக் கேட்டு மிருகங்கள் கவலை கொண்டன.

‘எதற்காக இந்த அழகிய பூமியை விட்டுப் போறாங்க?!’’ வினவியது முயல். ‘‘அதுவா?! அவங்க இந்த பூமியை ஏற்கெனவே பாழ்படுத்திட்டாங்க. இயற்கையின் சுழற்சியையும் கெடுத்துட்டாங்க. இதுக்கு மேலே இங்கே இருக்குறது ஆபத்துன்னு வேற இடத்துக்குப் போறாங்க’’. ‘‘நாமும் அவங்களோடு போக முடியாதா?’’ கேட்டது மான்.

‘‘உஹ¨ம்! அவங்க தங்களை காப்பாத் திக்கத்தான் நினைக்கிறாங்களே தவிர, நம்மளைப் பத்தி யோசிக்கவே இல்லை’’

‘‘அப்போ, நாம என்ன பன்றது?’’ ‘‘நாம இங்கேயே அழிய வேண்டியது தான்’’. அன்று முழுவதும் எந்த விலங்கும் எதுவுமே சாப்பிடவில்லை.

அடுத்த நாளும் அணில் ஆய்வுக்கூடத்துக்கு விரைந்தது. சில தகவல்களுடன் மாலை காட்டுக்குத் திரும்பியது. ‘‘நம்மையும் அழைத்துச் செல்ல அவங்க தீர்மானம் பண்ணிட்டாங்க!’’ என்று அணில் சொன்னவுடன் விலங்குகள் ரொம்பவும் ஆர்வமாயின.

‘‘அப்படியா?! என்று மயில் கேட்க, ‘‘உண்மையாகவே நம்மை அழைச்சுட்டுப் போறாங்களா?!’’ என்றது ஆமை. ‘‘ஆமா! அந்தக் கிரகத்திலும் நாம அவங்களுக்குத் தேவைன்னு நினைக்குறாங்க. அதனாலதான்!’’ ‘‘அட, புரிஞ்சுகிட்டாங்களா?!’’

‘‘ஆமாம்! பொதி சுமக்கவும், பால் கறக்கவும், குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டவும்னு இப்படி பல விஷயங்களுக்கு அவங்களுக்கு நாம தேவை. அதனால நம்மையும் அங்கே கொண்டு போறாங்க. இனி நாம் கவலைப்படவேண்டாம்’’. இதைக்கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ந்தன.

மறுநாள், முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டே வந்தது அணில். ‘‘அவங்களுக்கு நாம தேவைதான். ஆனால் நம்மை அழைச்சிட்டுப் போகாமலேயே அந்தத் தேவைகளை பூர்த்தி செஞ்சுக்குவாங்களாம்!’’ எல்லாரும் விழிக்க, அணில் விளக்கியது. ‘‘தங்களுக்குத் தேவையான விலங்குகளை குளோனிங் முறையில் உருவாக்கிகுவாங்களாம்!’’ அதைக்கேட்டு எல்லாரும் அசந்து போய் நிற்க, மூத்த விலங்கான யானை பேச ஆரம்பித்தது.

‘‘எனக்கென்னவோ இது வருத்தப்பட வேண்டிய விஷயமா தெரியலே! நிஜமாகப் பார்த்தால் நாம் சந்தோஷப்படணும். இதைக் கொண்டாடணும்!’’ ‘‘என்ன சொல்றீங்க?!’’ கேட்டது நரி. ‘‘இதோ பாருங்க, மனுஷங்கதான் பூமியை பாழ்படுத்தினது. அவங்க இங்கேயிருந்து போயிட்டா அப்புறம் இயற்கை தன் இயல்பு நிலைக்கு வந்துடும். பூமி மறுபடியும் ஒழுங்காயிடும். அதனால அவங்க நம்மையும் தங்களோட கூட்டிப்போக நினைத்தால்தான் நாம கவலைப்படணும்’’ என்று யானை நிதானமாகச் சொன்னது. இதைக் கேட்டு மற்ற விலங்குகள் மகிழ்ச்சி அடைந்தன.

நன்றி : ஜனார்த்தனன் , சுட்டிவிகடன்.


------------------------------------------------------------------------------------------------

வழிகாட்டி!!!


ஒரு ஜென் துறவி தனது சீடனுக்குச் சொல்லிக் கொடுக்கும்போது, எதுவோ சந்தேகம் வர அவர் ஒரு புத்தகத்தைக் காண்பித்து இதில் உள்ளதைப் படித்துச் சொல் என்றாராம். அதற்கு மாணவன் படித்துச் சொல்லியபின் கேட்டான், "குருவே உங்களுக்குப் படிக்கத் தெரியாது, ஆனாலும் எப்படி நீங்கள் மற்றவர்களுக்கு சொல்லித் தருகிறீர்கள்?" என்று.

அதற்கு அவர் அவனை வெளியில் அழைத்துச் சென்று, "அங்கே பார், அது தான் நிலா!" என்று சொன்னார்.பின் அவர் சொன்னார், "புத்தகம் என்பது என் கை போன்றது. கையால் நிலவைச் சுட்டிகாட்டியதால் என் கை நிலவாக ஆகிவிடாது. என் கை இல்லாமலும் நிலவைப் பார்க்க உன்னால் முடியும். அப்படி பார்க்க முடியாத நேரத்தில் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறது, கையின் பந்தம் நிலவைச் சுட்டிக்காட்டிய உடன் முடிந்து விட்டது. அதற்கு மேல் எப்போது வேண்டுமானாலும் என் கை துணையின்றி நிலவைப் பார்க்கலாம் என்றார்.

நன்றி : மரத்தடி வலைதளம், திரு.ஐயப்பன்

------------------------------------------------------------------------------------------------


குதிரையால் வந்த போர்!!!


மகேந்திரபுரியை ஆட்சி செய்து வந்தார் மன்னன் நரசிம்மர். விலங்குகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மன்னர், ஆசை ஆசையாய் ஒரு குதிரையை வளர்த்தார். அந்தக் குதிரையை பராமரிக்க வேலையாட்கள், மருத்துவர் குழு, போர்ப் பயிற்சி கொடுக்க தனியாக ஆசிரியர் என்று ஒரு துறையையே உருவாக்கினார். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள், பெரிய அளவில் பராமரிப்பு என்பதால் குதிரையும் ‘கொழு கொழு’வென வளர்ந்தது.

குதிரையின் கம்பீரமான தோற்றம் மன்னரை கர்வம் கொள்ளச் செய்தது. இதையடுத்து தன் குதிரைக்காக பெரிய அளவில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். விழாவில் கலந்து கொள்ள பக்கத்து நாட்டு மன்னர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்தார். விழாவில், ‘‘உலகிலேயே சிறந்த குதிரை என்னுடையதுதான். இந்தக் குதிரையைக் காட்டிலும் சிறந்த குதிரை வேறு எங்குமே இருக்க முடியாது!’’ என்று பேசினார். விழா சிறப்பாக நடந்து முடிந்தது. ஆனால்... மன்னரின் கர்வம் வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

ஒருநாள் தலைமை ஒற்றன் அவசர செய்தியுடன் வந்து மன்னரைச் சந்தித்தான். ‘‘மன்னருக்கு வணக்கம்! நம் ஒற்றர் படை மூலமாக ஒரு செய்தி வந்திருக்கிறது. ஊசியிலை நாட்டு மன்னர் தேசிங்கு ஒரு குதிரை வளர்த்து வருகிறார். மன்னர் சொல்வதை அந்தக் குதிரை அப்படியே செய்யுமாம்...’’

‘‘நிறுத்து ஒற்றனே! இதை எல்லாம் என்னுடைய குதிரையும் செய்யுமே... என் குதிரையின் வேகத்துக்கு எந்தக் குதிரையும் ஈடு கொடுக்க முடியாது’’ என்று இடைமறித்துப் பேசினார் மன்னர். ‘‘மன்னர்... மன்னா, தன் குதிரைதான் உலகிலேயே சிறந்த குதிரை என்று பெரிய அளவில் விழா எடுக்கப் போகிறாராம் மன்னர் தேசிங்கு. அந்த விழாவில் கலந்து கொள்ள தங்களுக்கும் அழைப்பு அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்களாம்’’ என்று கூறினான் ஒற்றன். ‘‘என்னது?!

என் குதிரைக்கு போட்டியாக இன்னொரு குதிரையா..?! இருக்கவே முடியாது. என் குதிரையின் பலம் என்ன என்பதை அந்த மன்னருக்குத் தெரியப்படுத்துகிறேன்’’ என்று சீறினார் மன்னர் நரசிம்மர். விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழுடன் சென்றார் மன்னர் நரசிம்மர். விழா ஆரம்பமானது.

விழாவில், ‘‘நான் ஒரு குதிரை வளர்க்கிறேன். அந்தக் குதிரை அபார ஆற்றல் கொண்டது. நான் சொல்வதை அப்படியே செய்யும். என் குதிரையைவிட சிறந்த குதிரை உலகில் யாரிடமும் இல்லை என்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது’’ என்று பேசினார் மன்னர் தேசிங்கு.

பின் தேசிங்கு&வின் குதிரை அவரது கட்டளைக்கு ஏற்ப நடனமாடியது. குதிரையைப் பார்த்து மற்ற மன்னர்கள் எல்லோரும் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், மன்னர் நரசிம்மர் மட்டும் அமைதி இன்றி இருந்தார். அப்போது... ‘‘நிறுத்துங்கள்! இந்தக் குதிரையைவிட என் குதிரைக்கு பல திறமைகள் உண்டு. இதைக் காட்டிலும் என் குதிரைதான் சிறந்தது. இதை எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும்’’ என்று ஆவேசமாகச் சொன்னார் நரசிம்மர்.

இதைக் கேட்டவுடன் விழா அரங்கமே அதிர்ச்சி அடைந்தது. ‘‘என் குதிரையின் பலத்தை மன்னர் நரசிம்மருக்குப் புரிய வைக்க விரும்புகிறேன். நான் போருக்குத் தயார்!’’ என்று சொன்னார் மன்னர் தேசிங்கு. பௌர்ணமி தினத்தன்று இரு நாட்டு மன்னர்களும் தன் படை பரிவாரங்களுடன் போர்களத்தில் மோதிக் கொண்டனர். இரு தரப்பிலும் ஏராளமான உயிர்கள் பலியாகிக் கொண்டிருந்தன. மன்னர்கள் இருவரும் தங்களது குதிரைகளில் அமர்ந்து கடுமையாக சண்டை போட்டனர்.

இறந்த உடல்களை தின்பதற்காக ‘கீச்...கீச்ச்’ என கத்தியபடி கழுகுகள் கூட்டம் வானில் வட்டமடித்தன. அப்போது அருகில் இருந்த காட்டில் வசித்து வரும் முனிவர் கழுகுகளின் சத்தம் கேட்டு போர்களத்துக்கு விரைந்தார்.

‘‘நிறுத்துங்கள்!’’ என்றார் முனிவர். முனிவரையின் கட்டளைக்கு கட்டுப்பட்டு மன்னர்கள் இருவரும் சண்டை போடுவதை நிறுத்தினர். ‘‘எதற்காக சண்டை போடுகிறீர்கள்?!’’ என்றார் முனிவர்.

போருக்கான காரணத்தை இருவரும் விளக்கினர். இதையடுத்து முனிவர் மிகவும் கோப மடைந்தார்.

‘‘ஐந்தறிவு படைத்த அந்தக் குதிரைகள் கூட தங்களில் யார் பெரியவன் என்று சண்டை போடவில்லை. ஆனால், நீங்கள் விலங்குகளைக் காரணம் காட்டி சண்டை போடுகிறீர்கள். யார் குதிரை சிறந்தது என்று போட்டி போடுவதை விட, யாருடைய நாட்டில் மக்கள் அமைதியாக வாழுகிறார்கள் என்பது போன்ற நல்ல விஷயங்களுக்காகப் போட்டி போடுங்கள். அது உங்களுக்கும் நல்லது. உங்கள் குடிமக்களுக்கும் நல்லது’’ என்று முனிவர் அறிவுரை கூறினார். முனிவரின் அறிவுரை கேட்டு மன்னர்கள் இருவரும் மனம் திருந்தினர். மன்னர்களை ஆசீர்வதித்து விட்டுச்சென்றார் முனிவர்.

நன்றி : கோபால்,சுட்டிவிகடன்

------------------------------------------------------------------------------------------------

யார் பெஸ்ட்?!


காட்டில் பொங்கல் திருவிழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. காட்டுக்குத் தலைவனான சிங்க ராஜாவுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதில் விலங்குகள் எல்லாம் மும்முரமாக இருந்தன. ஏனெனில், யாருடைய பரிசு சிங்க ராஜாவை மகிழ்விக்கிறதோ, அவரை தன்னோட ‘பெஸ்ட் ஃபிரண்டாக’ அறிவிப்பார்.

பட்டு வேஷ்டி கட்டிக்கொண்டு கம்பீரமாக தன் குட்டிகளுடன் ஒரு கட்டு கரும்பைத் தூக்கிக் கொண்டு யானை போனது.

ஒரு கூடை நிறைய ஆப்பிள்களுடன் டி&ஷர்ட்&ல் படு ஸ்டைலாகக் கிளம்பியது புலி.

ஜீன்ஸ் பேன்ட் போட்டுக் கொண்டு தேனாடையை பரிசாகக் கொண்டு சென்றது கரடி.

மணமணக்கும் பூங்கொத்துடன் அழகான சுடிதார் அணிந்து கொண்டு நளினமாகச் சென்றது மயில்.

இப்படி விலங்குகள் எல்லாம் பரிசுப் பொருட்களுடன் சென்று கொண்டு இருந்ததைப் பார்த்த குரங்கு குழம்பிப் போய் சோகமாக இருந்தது.

தன் எதிரியான மானை விட அமர்க்களமான பரிசு கொடுத்து சிங்கத்தை அசத்தி அதன் நண்பனாகி விடவேண்டும் என்பதே குரங்கின் குழப்பத்துக்குக் காரணம்! அடுத்து, மான் என்ன மாதிரியான பரிசு கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்பதை மறைந்திருந்து பார்த்தது குரங்கு. தன் வீட்டு வாசலில் உட்கார்ந்து பூண்டு உரித்துக் கொண்டிருந்தது மான். இதைப் பார்த்தவுடன் குரங்குக்கு ‘டக்’கென்று ஒரு பொறி தட்டியது. உடனே காட்டுக்குள் வேகவேகமாக ஓடியது. சிறிது நேரம் கழித்து... சிங்கத்தைப் பார்க்க சந்தோஷத்துடன் வந்திருந்தது குரங்கார்.

தன் பரிசுப் பொருளை சிங்கத்தின் முன் கொண்டு சென்று மூடியைத் திறந்தது. ‘‘தலைவா, இது ஸ்பெஷலான கோழி பிரியாணி. உங்களுக்காகவே ஸ்பெஷலாகச் செய்து கொண்டு வந்திருக்கிறேன்’’ என்று பெருமையாகச் சொன்னது குரங்கு. பிரியாணியின் மணம் காடு முழுவதும் கமகமத்தது.

‘குரங்கு தான் சிங்க ராஜாவோட பெஸ்ட் பிராண்ட் ஆகும்’ என்று மற்ற விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டன. இதைக் கேட்டு குரங்கு சந்தோஷப்பட்டது. கடைசியாக மான் கொண்டு வந்திருந்த வெஜிடபிள் பிரியாணியை ருசி பார்த்தது சிங்கம். இறுதியாக, ‘‘என்னோட பெஸ்ட் பிரண்ட் மான்!’’ என்றது சிங்கம். இதை சற்றும் எதிர்பாராத குரங்கு குழப்பத்துடன் சிங்கத்தைப் பார்த்தது.

‘‘குரங்காரே, எல்லாரும் சந்தோஷமாக இருக்க வேண்டிய இந்த நேரத்தில் நீ கோழிகளை பிடிச்சு பிரியாணி பண்ணியிருக்கே. கோழிகள் எனக்காக லட்டு செஞ்சுட்டிருந்த நேரத்துல நீ அதை துன்புறுத்தி சாகடிச்சிருக்கே. ஆனா, யாரையும் துன்புறுத்த நினைக்காத மானம்மா, வெஜிடபிள் பிரியாணி செஞ்சு கொண்டு வந்திருக்கு’’ என்று விளக்கியது சிங்கம். தன் தவறை உணர்ந்து மானுக்கு வாழ்த்துச் சொன்னது குரங்கு.

நன்றி : ஜூலியட் மரியலில்லி

------------------------------------------------------------------------------------------------

ஆந்தையும் ஃபீனிக்ஸ் பறவையும்!!!


லியாங் என்ற நாட்டின் தலைமையமைச்சராக வெய்சு என்பவர் பதவியேற்றார். சில காலம் கழித்து ஷுவாங்சு என்பவர் அவரைச் சந்திக்க சென்றிருந்தார். பொதுவாகவே நம்மோடு இருக்கும் சிலர் அவர்களுடைய கருத்துக்களை நம்மிடம் சொல்லத்தானே செய்வார்கள்.

அப்படித்தான் வெய்சுவுடன் இருந்த ஒருவர், வெய்சு, இப்போது ஷுவாங்சு இங்கே வருவதற்கு காரணம் என்னவென்று நினைக்கிறாய், உன்னுடைய தலைமையமைச்சர் பதவியை பறித்து தான் தலைமையமைச்சராவதற்குத்தான் ஷுவாங்சு இங்கே வந்துள்ளார் என்று கூறினார்.

இதைக்கேட்ட வெய்சுவுக்கு கதி கலங்கிவிட்டது. அடடா, ஷுவாங்சு நம்மைவிட திறமைசாலி, நிச்சயம் மற்றவர் சொன்னது போல, நம் பதவி பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம்தான் என்று உள்ளுக்குள் புழுங்கினான். சரி, முதலில் ஷுவாங்சுவை சந்தித்து பேசுவோம் என்று புறப்பட்டான்.

ஆனால் வெய்சு நகர் முழுதும் தேடியும் ஷுவாங்சுவை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆனதோ, ஏதானதோ என்ற குழப்பமும், பதிவி போனால் நாம் ஒன்றுமில்லாமல் போய்விடுவோமே என்ற கலக்கம் மறுபுறமுமாய் வெய்சு அலைந்து திரிந்தும் ஷுவாங்சுவை காணமுடியவில்லை. மூன்று நாட்கள் தேடி களைப்பானதுதான் மிச்சம்.

இறுதியில் ஷுவாங்சுவே வெய்சுவை சந்திக்கச் சென்றார்.தெற்கே ஃபீனிக்ஸ் என்ற ஒரு பறவை இருக்கிறது, அதை பற்றி நீ கேள்விப்பட்டதுண்டா? என்று வெய்சுவை நோக்கி வினவிய ஷுவாங்சு பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தார். இந்த ஃபீனிக்ஸ் பறவை தென் கடலிலிருந்து புறப்பட்டு வட கடல் நோக்கி பறக்கும். மிக அழகான சிறப்புமிக்க பாராசால் மரம் தவிர வேற் எந்த மரத்திலும் செடியிலும் சென்று அமராது. மூங்கில் பழங்களைத் தவிர்த்து வேறு எதையும் உண்ணாது. சுவையான சீர்சுனைகளில் தாகம் தணிக்குமே தவிர வேறு எந்த நீரையும் பருகாது.

இப்படி ஒரு நாள் ஃபீனிக்ஸ் பறவை வானில் பறந்துகொண்டிருக்கையில் கீழெ ஒரு ஆந்தை செத்து அழுகிப்போன ஒரு எலியை சாப்பிட தயராக இருந்தது. ஃபீனிக்ஸ் பறவை அந்தையை கடந்து சென்றபோது, ஆந்தை மேலே அண்ணாந்து பார்த்து ஃபீனிக்ஸ் பறவையை விரட்டும் தொனியில் சூ என்றதாம்.என்ன நீயும் உன் தலைமையமைச்சர் பதவியைக்கொண்டு என்னை சூ என்ற துரத்த பார்க்கிறாயா என்றாராம் ஷுவாங்சு. வெய்சு வெட்கி தலைகுனிந்தான்.

------------------------------------------------------------------------------------------------

மாற வேண்டாம்!


சந்தனக் காட்டின் முடிசூடா மன்னனான சிங்கத்தைப் பார்க்க ஓடோடி வந்தது அணில். ‘‘என்ன விஷயம் அணிலாரே?’’ என்று கம்பீரமாகக் கேட்டது சிங்கம். ‘‘ராஜாவே, நம் காட்டுக்குப் பக்கத்தில் மனிதர்கள் வசித்து வருகின்றனர்.

அவர்களின் நடவடிக்கை களைப் பார்த்து நம் தோழர்கள் தங்களது குணம் மற்றும் பழக்கவழக்கங்களையே அடியோடு மாற்றிக் கொண்டு வருகின்றனர்’’ என்று தயங்கிய படியே சொன்னது அணில். ‘‘இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?’’ என்று சற்று குரலை உயர்த்திக் கேட்டது சிங்கம். ‘‘முடியும் அரசே!’’ என்றது அணில்.

அணிலைக் கூட்டிக்கொண்டு காடு வலம் சென்றது சிங்கம். அங்கு ஒரு காகம், இறந்து கிடந்த ஒரு பல்லியை கொத்தி தின்று கொண்டிருந்தது. ‘‘அரசே! காகங்களின் இயல்பே கூடி சாப்பிடுவது தான். ஆனால், இங்கு ஒரு காகம் மட்டும் இரையை தனியாகச் சாப்பிடுகிறது. நம் காட்டில் வாழும் எல்லா காகங்களுமே இப்படி அடியோடு மாறி விட்டன’’ என்றது அணில்.

அப்போது திடீரென்று மழை தூறல் விழுந்தது. இருப்பினும், சிங்கமும் அணிலும் பயணத்தைத் தொடர்ந்தன. ‘‘அதோ, அந்த மரத்தடியில் பாருங்கள்’’ என்று சிங்கத்தின் கவனத்தைத் திருப்பியது அணில்.

ஒரு மரத்தடியில் எருமைகள் எல்லாம் கூட்டமாக நின்று கொண்டிருந்தன. ‘‘அரசே, எருமைகளின் குணமே மழையில் நனைவதுதான். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், கொஞ்சம்கூட அசையாமல் அப்படியே நின்று கொண்டிருக்கும். ஆனால், இப்போதோ சாதாரண மழைத்துளிக்குப் பயந்து மரத்தடியில் எல்லா எருமைகளும் நிற்கின்றன’’ என்று விளக்கியது அணில்.

இப்படி சென்ற இடங்களில் எல்லாம் மாற்றங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தது சிங்கம். காடு வலத்தை முடித்துக் கொண்டு தன் ஆலோசகர்களான நரியார் மற்றும் புலியாரிடம் பேசி ‘மறுநாளே எல்லா விலங்குகளும் பக்கத்துக் காட்டுக்குப் போவது’ என்றும் ‘அங்கு மனித நடமாட்டமே இல்லாமல் பார்த்துக் கொள்வது’ என்றும் முடிவு செய்தது.

இதைக் காட்டில் உள்ள எல்லா விலங்குகளுக்கும் தண்டோரா மூலம் அறிவிக்கச் செய்தது சிங்கம். மறுநாள்... காலை விலங்குகள் எல்லாம் தயாராக இருந்தன. ‘‘எல்லாரும் வந்து விட்டார்களா? இன்னும் யாராவது வர வேண்டியிருக்கிறதா?’’ என்று கேட்டது சிங்கம்.

‘‘அரசே, அன்னப்பறவை மட்டும் வரமறுக்குது’’ என்று பயத்துடன் சொன்னது அணில். ‘‘அன்னப்பறவையை அழைத்து வாருங்கள்’’ என்று மிகுந்த கோபத்தில் உத்தரவிட்டது சிங்கம். சிறிது நேரத்தில் அன்னப்பறவையும் வந்தது. ‘‘புதிய காட்டுக்குச் செல்ல உனக்கு என்ன தயக்கம்?’’ என்று கர்ஜித்தது சிங்கம்.

‘‘அரசே, என்னை மன்னியுங்கள். எனக்கு பசிக்கிறது. முதலில் எனக்கு பால் கொடுக்க உத்தர விடுங்கள்’’ என்று கோரிக்கை வைத்தது அன்னப்பறவை. சிங்கமும் உத்தரவிட்டது. அன்னப்பறவையும் பாலை வேகமாக உறிஞ்சிக் குடித்துவிட்டு நிமிர்ந்தது. ‘‘அரசே, எனக்கு வைக்கப்பட்டது சுத்தமான பால் அல்ல. அதில் அதிக அளவில் தண்ணீர் கலந்திருந்தது. இருப்பினும்,எனக்குத் தேவையான பாலை மட்டும் நான் குடித்தேன். தண்ணீரை அப்படியேவிட்டு விட்டேன்.அது போல்தான் மனிதர்களிடம் இருந்தும் நல்லதை மட்டும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

எனவே நம் தோழர்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றினாலே போதும். வேறு காட்டுக்குப் போவது என்பதுஅவசியம் இல்லாதது’’ என்றது அன்னப்பறவை.

அதைஏற்றுக் கொண்ட சிங்கம், மற்றவிலங்கு களுக்குப் பல புதிய உத்தரவு களைப்பிறப்பித்தது. அதோடு,அன்னப் பறவையை தன் கௌரவ ஆலோசகராகவும் நியமித்தது சிங்கம்!

நன்றி : கே.பி.ஜனார்த்தனன் சுட்டி விகடன்

16 April 2008

என்னருகே நீ இருப்பதானால் ............



எடுத்துகொள் என் கண்களை!!!

உனக்காக நான் செய்யும்

தியாகமல்ல இது .....




நான் உண்மையில் குருடனாகவே இருக்க

ஆசைப்படுகிறேன்

நீ

என்னருகே இருப்பதானால் ........



மருண்ட உன் விழிகளில்

என் விழிகொண்டு

நீ

பார்த்து ரசிக்கும் இவ்வுலகை

வர்ணம் பூசிய வார்த்தைகளால்

நீ

வர்ணித்தாலே போதும்......


நான்

சாகாமல் சொர்க்கம் கண்ட

அனுபவம் பெறுவேன்


உன்னால்

வாழும்போதே கண்ணளித்த

தியாகியும் ஆவேன்

அதனால் .....

நான் குருடனாகவே இருக்க

ஆசைப்படுகிறேன்


நீ

என்னருகே இருப்பதானால் ............

பிரபு

10 April 2008

பனிபோர்வை


என்னிடம் வெட்கப்பட்டு கொண்டு


பனிப்போர்வைக்குள் ஒளிந்திருக்கிறாள்


என் இயல்பு வாழ்க்கையின்


இயந்திரக் காதலி .....




பாவம் இவளுக்கு தெரியாது


மனிதக் காதலியிடம்


மனதை பறிகொடுத்துவிட்ட நானும் ....



வெட்கமில்லாமல் இவள் மீது


படர்ந்திருக்கும் இந்த


பனித்துளியும் ஒன்று தானென்று!!!!




இருவருமே காலைவரை


தூங்காது விழித்திருப்போம்


பொறுமையுடன் காத்திருப்போம்


ஆனால்


என்னவளை (சூரியனை) கண்டவுடன்


உருகி விடுவோம்...




பிரபு

09 April 2008

இந்தியர்களின் நிலை - இது கதையா இல்லை கவிதையா??

வெள்ளையனே வெளியேறு !!!!

1947 வரை....

வெள்ளையனே வேலைகொடு

1947 முதல் ........



நாம் ஆண்டவனை மட்டும் தேடவில்லை

நம்மை பலநாள்

ஆண்டவனையும் தேடித்தான் போய்க்கொண்டிருக்கிறோம்!!



என்று மாறும் இந்த அவல நிலை ???????



வெள்ளையனே வெறுத்துப் போய்

இந்தியனே வெளியேரென்று

கதறி அழும் போது தானோ?????????



மாற்றங்கள் மட்டுமே நிலையானது

இதற்கு நாமே விலைபோனது

மிகவும் வருந்ததக்கது மட்டுமல்ல

சிந்திக்கதக்கதும் கூட .......

பிரபு

04 April 2008

தாயே!! தமிழ் மகளே!!

என்னித்திரையில் நித்தம் வரும்

என்னவளே ......

என்னெஞ்சில் நீங்காத இடம் பெற்ற

பொன்மகளே .......

நாடு பல கடந்து

வாழ்வில்

ஏற்றம் பல அடைந்து

என்னையே நான் மறந்தாலும்

நாளும் உனை தழுவிடுவேன்

என் காதலியாக

அனுதினமும் தொழுதிடுவேன்

என் அன்னையாக

எந்நாளும் உனை மறவேன்

என்தாயே!! தமிழ் மகளே!!

பிரபு

03 April 2008

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

நிலவும் பெண்ணும் ஒன்று தான் !!!!!!

ஒவ்வொரு மாதமும்

இருவரின் முகமும்


தொடக்கத்தில் பிரகாசமாகவும்

பின்பு தேய்ந்தும் போவதால் ..............


குறிப்பு: சம்பள கவர்க்கு wait பண்ற பெண்கள சொன்னேன்பா


பிரபு

உண்மை ஒரு நாள் வெளியே வரும்.


மிகவும் புகழ் பெற்ற ஜென் மாஸ்டர் அவர். ஜென் தத்துவதில் அவரது ஈடுபாடும், தத்துவங்களை விளக்கும் தன்மையும் நாடுகடந்து அவரைப் புகழ் பெறச்செய்திருந்தன. ஜென் மாஸ்டர் வசித்த வீட்டின் அருகில் இருந்த வியாபாரிக்கு ஒரு அழகான பெண் இருந்தாள். ஒரு நாள் திடீரென்று அந்த மகள் குழந்தை பெற்றாள். அப்பெண்ணின் தந்தைக்கோ பயங்கர அதிர்ச்சி. எவ்வளவு வற்புறுத்தியும் இதற்கு யார் காரணம் என்பதை அந்தப் பெண் கூற மறுத்தாள் கடைசியில் ஜென் மாஸ்டர் தான் காரணம் எனக் கூறினாள். மிகுந்த கோபத்துடன் , குழந்தையுடன் மாஸ்டரிடம் வந்த வியாபாரி, இந்த குழந்தைக்கு நீங்கள்தான் தந்தையாமே? என்று கேட்டார். மாஸ்டர் சிறிதும் பதறாமல் 'ஓ அப்படியா! ' என்றார், மாறாத புன்னகையிடன். கடைசியில் குழந்தையை மாஸ்டரிடமே ஒப்படைத்து விட்டார்கள். மாஸ்டர் கொள்கை தவறிவிட்டதாக பணியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது பெயருக்கும் நீங்காத களங்கம் உண்டானது, எனினும் எதைப்பற்றியும் கவலைப்படாத மாஸ்டர் கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்க்க ஆரம்பித்தார். ஒரு வருடம் கழித்து குழந்தைக்கு உண்மையான தந்தை மார்க்கெட்டில் இருக்கும் ஒரு வாலிபன் தான் என்று உண்மையை கூறினாள்,அந்தப் பெண். வியாபாரி ஜென் மாஸ்டரிடம் வந்து மன்னிக்கும் படி வேண்டி, குழந்தையை தந்து விடுமாறு மன்றாடினார். எந்த ஒரு தயக்கமும் இன்றி குழந்தையைக் கொடுத்த மாஸ்டர் கேட்டார், ஓ அப்படியா!

நீதி: பிறருக்கு நன்மை விளையும் எனில் பழியையும் சுமக்கலாம். அனால் நீரின் ஆழத்தில் வைக்க பட்ட பந்தைப் போல் உண்மை ஒரு நாள் வெளியே வரும்.

01 April 2008

புதை மணல்


நிரந்தர வலிகள் ........

நிறைவேறா ஆசைகள் ........

வாழ்வின் பல கட்டத்தில் அடி வாங்கி வாங்கியே

மரத்து போன என் இதயம் ////


வற்றாத கண்ணீரும் ......

விரக்தியான பார்வையும் மட்டுமே

கொண்ட என் விழிகள் ..........


மூடித் திறக்கும் இமைசிறைக்குள்

மூழ்கி போன பாலைவனம் மட்டுமல்ல

அது ஒரு புதை மணலும் கூட !!!


என் கனவுகள் அனைத்தும்

வெறும் கானல் நீராய்

காணாமல் போனதால் !!!!!


பிரபு

நீதிக் கதைகள் / சிறு கதைகள்

புலவரும் கஞ்சனும்!!!


ஒரு ஊரில் ஒரு புலவர் இருந்தார். அவருக்குப் பணம் தேவைப்பட்டது.பக்கத்து ஊரில் ஒரு பணக்காரன் இருந்தான். அவனைப் புகழ்ந்து பாடி பரிசுபெற்று வரலாம் என்று அவர் எண்ணினார்.

அவன் ஒரு பெரிய கஞ்சன் என்பது அவருக்குத் தெரியாது.புலவர் அவனிடம் போனார். அவனைப் புகழ்ந்து சில பாடல்கள் பாடினர்.பணக்காரன் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் சில பாடல்கள் பாடினார். அவன் இருநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் பாடினார்.

அவன் 'முன்னூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் இன்னும் உற்சாகத்துடன் பாடினார்.

அவன் 'நானூறு ரூபாய் தருகிறேன்' என்றான். இன்னும் கொஞ்சம் பாடினார்.

அவன் 'எழுநூறு ரூபாய் தருகிறேன்' என்றான். புலவர் பாட்டை முடித்துக்கொண்டார்.

பணக்காரன் புலவருக்கு நூறு ரூபாய் கொடுத்தான். புலவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அவர் 'ஐயா, நீங்கள் 700 ரூபாய் தருவதாகச் சொன்னீர்களே' என்றார். அதற்கு அவன் "புலவரே, நான் திரும்பத் திரும்ப நூறு ரூபாய்தானே தருகிறேன் என்றேன்.

முதலில் 'நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'இரு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'முன் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'நான் நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன். பிறகு, 'எழு. நூறு ரூபாய் தருகிறேன்' என்றேன்.

நீங்கள்தான் தப்பாகப் புரிந்துகொண்டு இருக்கிறீர்கள்' என்றான், புலவருக்குப் பணக்காரனின் கஞ்சத்தனம் புரிந்தது. வெறும் நூறு ரூபாயோடு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

------------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் மாலை ஒரு தாத்தா தன் பேரனுக்கு நீதிக்கதைகள் சொல்லிக் கொண்டிருந்தார்.அதாவது, நம்மிடையே எப்பொழுதும் இரு விலங்கு போன்ற குணங்களுடன் சண்டை நடந்து கொண்டிருக்கிறது.ஒன்று மிகவும் நல்ல பண்பு,பாசம்,நேசம்,மனிதத்தன்மை,உண்மை போன்ற குணங்கள்.மற்றொன்று கோபம்,பொறாமை,பொய், தான்மட்டுமே எல்லாமும் எனப்படும் ஈகோ போன்ற குணங்கள் என்று கூறினார்.அப்போ இதில் எந்த விலங்கு ஜெயிக்கும் என்று கேட்டான் சிறுவன்.தாத்தா நீ எதற்கு உணவு கொடுக்கிறாயோ அதுவே ஜெயிக்கும் என்றார்.

நீதி :நாம் எப்போதும் நல்லவற்றையே நினைப்போம் செய்வோம் , நல்லதே நடக்கும்.

------------------------------------------------------------------------------------------------

கோடாரி உத்தி


மரம் வெட்டும் வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி அந்த நிறுவனத்தின் முதலாளியைப் பார்க்கப் போனான். ""என்ன வேண்டும்?'' என்று அவர் கேட்டார். ""எனக்கு நியாயம் வேண்டும்'' என்றான் தொழிலாளி. ""ஏன் உனக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?'' என முதலாளி கேட்டார். ""ஆமாம். 5 ஆண்டுகளாக நான் இங்கே மரம் வெட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் வாங்கும் சம்பளத்தைவிட 2 மடங்கு சம்பளத்தை 6 மாதத்திற்கு முன்பு வந்த ஒரு தொழிலாளிக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம்?'' என்று கேட்டான். ""அவன் ஒரு நாளில் நிறைய மரம் வெட்டுகிறான். உன்னால் அப்படி வெட்ட முடியவில்லை. நாங்கள் வேலைத் திறத்தையே பார்க்கிறோம். வேலை செய்த ஆண்டுகளை அல்ல. நீயும் நிறைய மரம் வெட்டு. சம்பளம் தருகிறோம்'' என்றார் முதலாளி. ""எப்படி நிறைய மரம் வெட்டுவது? என்ன முயன்றாலும் முடியவில்லையே'' என்றான் தொழிலாளி. ""நீ புதிதாக வந்த தொழிலாளியைப் பார். எப்படி அதிக மரம் வெட்டுவது என்று அவனை கேள்'' என்றார் முதலாளி. முதலாளியின் ஆலோசனையை ஏற்று அந்த பழைய தொழிலாளி, புதிய முதலாளியை சந்தித்தான். என்னால் அதிக மரங்களை வெட்ட முடியவில்லை. உன்னால் எப்படி முடிகிறது? அந்த ரகசியத்தை எனக்குச் சொல்வாயா? என்று பழைய தொழிலாளி கேட்டான். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும் நான் 2 நிமிடம் வேலையை நிறுத்துகிறேன். அப்போது மரம் வெட்டும் கோடாரியை நான் கூர்மைப்படுத்திக் கொள்கிறேன். அதற்குப் பின் அடுத்த மரத்தை வெட்டப் போகிறேன் என்று பதில் சொன்னான் புதிய தொழிலாளி. பழைய தொழிலாளியும் அப்படியே செய்தான். நிறைய மரங்களை வெட்டினான். நிறைய சம்பளம் பெற்றான்.

நீதி: எந்தத் தொழிலை நீங்கள் செய்கிறீர்களோ அதற்காக புதிய உத்திகளுடன் உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------

எல்லோருக்கும் கஷ்டம் உண்டு!


ஓர் ஊரில் ஒரு வியாபாரி இருந்தார். அவர் கடவுள் பக்தி உடையவர். ஜவுளி மூட்டையைச் சுமந்துகொண்டு கிராமப்புறங்களுக்கு நடந்தே சென்று வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் பிள்ளைகள் சரியாகப் படிக்காததால், அவர் மிகவும் வேதனை அடைவார். தெய்வம் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் கொடுக்கிறது? என்று நினைத்து, தெய்வத்திடம் போய் முறையிடுவார். அப்போது ஓர் எண்ணம் தோன்றியது. தெய்வத்திடம் தனிமையில் நம் குறைகளை எடுத்துக் கூறினால் என்ன? என்று நினைத்தார். அதன்படி, ஒரு நாள் பூஜையெல்லாம் முடிந்து கோயில் மூடப்படும்போது கோயிலுக்குள்ளேயே மறைந்துகொண்டார். அவருக்கு அசதியாக இருந்ததால், அங்கேயே சிறிது நேரத்தில் உறங்கிவிட்டார். நடு இரவில் ஏதோபேச்சுக் குரல் கேட்டது. விழித்துப் பார்த்தார். அப்போது படிக்கட்டும் தூணும் பேசிக்கொண்டிருந்தன. அவர் அதை உற்றுக் கவனித்தார். அப்போது படிக்கட்டு தூணிடம் நாம் எல்லோரும் ஒரே பாறையாகத்தான் இருந்தோம். அங்கு வந்த கொத்தனாரும் சிற்பியும் பாறையைத்தட்டிப் பார்த்து, ‘இந்தக் கல்லைப் படிக்கட்டாகவும் இந்தக் கல்லைத் தூணாகவும் இந்தக் கல்லை சிலையாகவும் வடிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படி நம்மை உருவாக்கினார்கள். இப்போது நீ பரவாயில்லை, தூணாக நிற்கிறாய். நானோ படிக்கட்டாக மாறினேன் என்னை கோயிலுக்கு வருவோர், போவோர் எல்லோரும் மிதித்துச் செல்கின்றனர். என்னால் வலியைத் தாங்க முடியவில்லை... என்று கூறியது. அதற்குத் தூண், படிக்கட்டிடம் உனக்காவது பரவாயில்லை, மிதித்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். ஆனால், நானோ அப்படியல்ல.. எப்போதுமே இந்தக் கோபுரத்தைச் சுமந்துகொண்டு அப்படியே நின்றுகொண்டிருக்கிறேன். நம்முடன் வந்து சிலையாக இருக்கிறதே, அதற்கு தினசரி பால் அபிஷேகம், சந்தன அபிஷேகம், நெய் அபிஷேகம் என்று பலவிதமான அபிஷேகங்கள் செய்கிறார்கள். சிலை சந்தோஷமாக இருக்கிறது! என்று தூண் கூறியது. உடனே எங்கோ இருந்து மெதுவாக ஓர் அழுகைச் சத்தம் கேட் டது. அது சிலையின் குரல்தான். உடனே படிக்கட்டும் தூணும் சிலையைப் பார்த்து, நீதான் சந்தோஷமாக இருக்கிறாயே.. ஏன் அழுகிறாய்? என்று கேட்டன. உடனே சிலை, படிக்கட்டைப் பார்த்து உன்னை மிதித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். தூணோ, கோபுரத் தைத் தாங்கிக் கொண்டு நின்றுவிடுகிறது. ஆனால், என் நிலை... ஒவ்வொருவரும் வந்து ஒரு அபிஷேகம் செய்துவிட்டு, அவரவர் குறைகளை எல்லாம் சொல்லி என்முன் கண்ணீர் வடிக்கும்போது, ‘ஏன்தான் நாம் சிலையாக வந்தோமோ... மக்களுக்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதா? என்று தினமும் நான் வேதனையடைகிறேன். இதையெல்லாம் கேட்கக் கேட்க என்னால் தாங்க முடியவில்லை’’ என்று கூறியது. இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ஜவுளி வியாபாரிக்கு அப் போது ஓர் உண்மை புரிந்தது.

நீதி : கஷ்டங்கள் என்பது இயற்கை. அதை எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவதுதான் வாழ்க்கை என்பதே அது.

------------------------------------------------------------------------------------------------

ஒரு முதலாளி தனது கம்பெனியின் இரண்டு தொழிலாளர்களோடு பிக்னிக் போனார்.போன இடத்தில் எதிர்பாராதபடி அவர்களது எதிரில் ஒரு தேவதை தோன்றி, ''ஆளுக்கொரு வரம் தருகிறேன். கேளுங்கள்!'' என்றது.தொழிலாளர்களுக்குப் பரம ஆனந்தம். உச்சகட்ட பரவசத்தில், ''நான் உடனே சுவிட்சர்லாந்துல இருக்கணும்!'' என்று முந்திக்கொண்டு கேட்டார் ஒருவர். தேவதை அருள்பாலிக்கவும், அடுத்த விநாடி.. அவர் சுவிட்சர்லாந்தில்!துடித்துக்கொண்டிருந்த இன்னொருவர், ''லாஸ்வேகாஸ் சூதாட்ட அரங்கில் நான் உல்லாசமாக இருக்க வேண்டும்'' என்று கேட்க, அவருக்கும் வரம் தரப்பட்டது.பொறுமையாக நின்றிருந்த முதலாளியைத் தேவதை பார்க்க, ''அந்த ரெண்டு பேரும் உடனே இங்கே இருக்கணும்'' என்றார்.

நீதி: எப்பவுமே முதலாளியைத்தான் முதல்ல பேசவிடணும்.

------------------------------------------------------------------------------------------------

நாடோடிக் கதை: சிங்கப்பூர்

பல வருடங்களுக்கு முன்பு சிங்கப்பூரைச் சுற்றியுள்ள கடல்பகுதியில் பயங்கரமான வாள் மீன்கள் நிரம்பியிருந்தன. இவற்றின் மூக்குப் பகுதி நீளமாக வாள் போல இருக்கும். மீன் பிடிக்க கடலுக்குள் செல்லும் மீனவர்களையும் படகுகளையும் வாள் மூக்கால் குத்தி, கடலில் இருந்து விரட்டும். கடற்கரைகளில் அமரும் மக்களையும் சும்மா விடாது. அந்த நேரத்தில் சிங்கப்பூரின் அரசராக இருந்தவர் ராஜா இஸ்கந்தர். தனது படைவீரர்களிடம் வாள் மீன்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார். பெரிதாக வந்த ஓர் அலையில் கடலுக்குள் அடித்துச் செல்லப் பட்ட வீரர்கள், ஈட்டியால் வாள் மீன்களைக் கொல்ல முயன்றனர். ஆனால், ஜெயித்தது என்னவோ வாள் மீன்கள்தான்! பல வீரர்களைத் தங்கள் வாள் முக்கால் காயப்படுத்தி துரத்தி அடித்தன. வீரர்களின் ரத்தத்தால் கடல் செந்நிறமாக மாறியது. போர்வீரர்களில் பலர் இறந்ததால் பயந்துபோனார் அரசர். சோகமாக கடற்கரை மணலில் நடந்துகொண்டு இருந்தார். இந்தப் பயங்கரமான வாள் மீன்களை எப்படிக் கொல்வேன்? என்று கத்தினார். வழி இருக்கிறது என்றது ஒரு குரல். திரும்பிப் பார்த்தார் அரசர். அருகில் இருந்த பாறையில் ஒரு சிறுவன் அமர்ந்து இருந்தான். அவனே தொடர்ந்து, நீரில் வாழைமரங்களால் ஒரு சுவர் எழுப்புங்கள். அலையில் வாள் மீன்கள் வரும்போது அவற்றின் வாள் மூக்கு கூர்மையாக இருப்பதால் வாழை மரத்தில் குத்தி மீன்கள் சிக்கிவிடும்! என்றான். அதன்படியே நாடு முழுவதும் இருந்து வாழை மரங்களை எடுத்து வந்து கடலில் சுவர் எழுப்பினார் கள். அடுத்து வந்த பெரிய அலையில் வாள் மீன்கள் வாழை மரத்தில் சிக்கிக்கொண்டன. அவற்றை அரசரின் வீரர்கள் கொன்று குவித்தனர். ஒரு வீரன்கூட இறக்கவில்லை. அதே நேரம், ஒரு வாள் மீன்கூட தப்பிக்கவில்லை! இறந்து கிடந்த மீன்களை எடுத்து சமைத்துப் பெரிய திருவிழாவாகவே கொண்டாடினர். ஆனால், அரசருக்கு ஒரு வருத்தம் இருந்தது. தனது தளபதியிடம் அந்த சிறுவன் மிகவும் புத்திசாலி. என்னைவிட சக்தி வாய்ந்தவனாக ஒரு நாள் வருவான் என்றார். அன்று இரவு அந்தச் சிறுவனைக் கொல்ல நான்கு வீரர்களை அனுப்பினான் தளபதி. அவர்கள் அந்த மலைக்குச் சென்றனர். அங்கே பயங்கர உருவத் தோடு ஒரு கிழவி நின்றிருந்தாள், ஏமாற்றுக்காரர் களே என்று கத்திய அவள், உங்களுக்கு உதவி செய்த சிறுவனையே கொல்லப் போகிறீர்களா? நான் உங்களுக்குத் தண்டனை தருவேன். என்றாள். பயந்துபோன வீரர்கள் ஓட்டம் பிடித்தார்கள். திடீரென அவர்கள் முன் இருந்த தரைப் பகுதி பிளந்தது. அதில் விழுந்து இறந்து போனார்கள் வீரர்கள். அவர்களது ரத்தம் ஆறாக ஓடி மலையையே ரத்த நிறமாக்கியது. அதிலிருந்து அதற்கு சிவப்பு மலை என்று பெயர் வந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்தக் கிழவியோ, சிறுவனோ காணப்படவில்லை. எப்போது அந்தச் சிறுவன் திரும்பி வரு கிறானோ அதுவரை மலை சிவப்பாகத்தான் இருக்கும். பல உயிர்களைக் காப்பாற்றிய அப்பாவி சிறுவனைக் கொல் வதற்காகப் போட்ட வஞ்சகத் திட்டத்தை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் & இது சிங்கப்பூர் மக்களின் நம்பிக்கை!

------------------------------------------------------------------------------------------------

சொல் புத்தி


ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர்.

இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

------------------------------------------------------------------------------------------------

இருப்பதில் திருப்தி அடை!


குருவிடம் வந்தான் ஒருவன்.‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’‘‘

ஆமாம் குருவே. ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்ப சந்தோஷமா இருக்கான். எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார்.குரு சொன்னபடியே செய்தான் வந்தவன். மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான்.‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.

’’‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...’’‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

’’‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

------------------------------------------------------------------------------------------------

‘‘குருவே, வாழ்க்கை மிகவும் சிரமமாயிருக்கிறது. கவலை, கஷ்டம், வருத்தம் இவைதான் நிறைந்திருக்கிறது.

’’‘‘அப்படியா?’’‘‘

ஆமாம் குருவே. வாழ்க்கை இன்பமாகவே இருக்க ஏதாவது வழியிருக்கிறதா சொல்லுங்கள், குருவே.

’’‘‘காபி சாப்பிடுகிறாயா?’’ என்று கேட்டார், குரு.

தலையசைத்தான் வந்தவன்.உள்ளேயிருந்து ஒரு கிண்ணத்தில் காபித்தூள் கொண்டு வந்தார்.

‘‘இந்தா, சாப்பிடு...’’வந்தவனுக்குப் புரியவில்லை. ‘‘சாப்பிடு, பாலைக் கொண்டு வருகிறேன்’’ என்று இன்னொரு கிண்ணத்தில் பாலைக் கொண்டு வந்தார். பிறகு இன்னொரு கிண்ணத்தில் தண்ணீர், சர்க்கரை எல்லாம் வந்தன. ‘‘குருவே, இவற்றை எப்படி தனித்தனியே சாப்பிடுவது?

’’‘‘காபியையே உன்னால் தனித்தனியாகச் சாப்பிட முடியவில்லை. வாழ்க்கையும் அப்படித்தான். பிரித்துச் சாப்பிட இயலாதது’’ என்றார் குரு.

------------------------------------------------------------------------------------------------

உள்ளச் சொத்து...


ஒரு பணக்காரன் தன் வீட்டுக்கு குருவை அழைத்து வந்தான். பெரிய வீடு. இருவரும் மொட்டை மாடியில் நின்றிருந்தார்கள். தனக்கு மன நிம்மதியே இல்லை என்று குருவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.‘‘குருவே, வடக்குப் பக்கம் பாருங்கள். அதோ அங்கே தூரத்தில் ஒரு பனைமரம் தெரிகிறதே, அதுவரை என்னோட நிலம்தான். நான்தான் கவனிச்சுக்கறேன். இதோ தெற்குப் பக்கம் தெரிகிறதே ஒரு மாமரம், அதுவரையும் என் இடம்தான். மேற்குப் பக்கம் பாருங்கள், தூரத்தில் ஒரு டிரான்ஸ்பார்மர் தெரியுதே, அதுவரைக்கும் என் இடம்தான். அப்புறம் வீட்டுக்கு எதிரில் கிழக்குப் பக்கம் அது முழுதும் எனதுதான்’’ என்று தன் வீட்டைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டினான். ‘‘இந்தச் சொத்துக்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்தவை. இத்தனை வசதிகள் இருந்தும் எனக்கு நிம்மதி இல்லாமல் இருக்கு குருவே’’ என்றான்.

குரு அவனை அமைதியாகப் பார்த்தார். ‘‘எல்லா இடங்களிலேயும் சொத்து சேகரித்து வைத்திருக்கிறாய். இங்கே சேர்த்து வைத்திருக்கிறாயா?’’ என்று அவன் நெஞ்சைச் சுட்டிக் காட்டினார். பணக்காரனுக்குப் புரியவில்லை.‘‘அன்பு, பாசம், நட்பு போன்ற நல்ல சொத்துக்களை அங்கே சேர்க்க வேண்டும். அதுதான் நிம்மதி தரும்’’ என்றார் குரு.

நீதி: உலகச் சொத்துக்களைவிட உள்ளச் சொத்து நிம்மதி தருபவை.

------------------------------------------------------------------------------------------------

உன்னால் முடியும்!!!


முயல் சின்னுவுக்குப் பசி தாங்கமுடியவில்லை. ஓவ்... என்ன இப்படிப் பசிக்குது? பசி தாங்க முடியலே! அம்மா... என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டது. அம்மா முயல், சின்னுவைப் பாவமாகப் பார்த்தது. சின்னு கிளம்பு... இப்படியே உட்கார்ந்துட்டு இருந்தால், சாப்பிட ஒண்ணும் கிடைக்காது. ஆத்தோரமா புல்லு நிறைய இருக்கும். இஷ்டத்துக்கும் சாப்பிடலாம். போகலாம், வா... என்றது அம்மா முயல். ஆறு ரொம்ப தூரமாச்சே?ரொம்ப தூரம்தான்... இங்கே புற்கள் எல்லாம் காய்ஞ்சு கிடக்குது. நாம ஆத்தங்கரைக்குப் போறதைத் தவிர, வேற வழி இல்லே... சரிம்மா, போகலாம்... என்று முயல் சின்னு அரைமனதாகச் சொல்லிக்கொண்டு புறப்படத் தயாரானது.

அம்மா முயலும் சின்னுவும் ஆற்றை நெருங்கி விட்டன. ஆற்றங்கரையைப் பார்த்த சின்னு திகைத்துப் போய்விட்டது. என்னம்மா இது... இங்கே நிறைய புல் இருக்கும்னு சொன்னே! வெறும் பாறைதான் இருக்கு... சின்னு ஏமாற்றத்தோடு சொன்னது. இக்கரையில பார்க்காதே... அக்கரையில பாரு! என்றது அம்மா முயல். அக்கரையைப் பார்த்த சின்னுவின் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. ஆவ்... எவ்வளவு புல்லு? இவ்வளவு புல்லை நான் பார்த்ததே இல்லே! சின்னு... ஆத்தைத் தாண்டிப் போகலாம், வா... எ...என்னது? என்று சின்னு திடுக்கிட்டது. ஏன் சின்னு... என்னாச்சு? இவ்வளவு பெரிய ஆத்தை எப் படித் தாண்டிப் போக முடியும்? சின்னு ஆற்றை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பெருமூச்சு விட்டது. என்னால தாண்ட முடியாதே! என்றது ஏக்கத்துடன்.

அக்கரையில் ஏராளமான புற்கள் வளர்ந்திருந்தன. சின்னு, இது சின்ன ஆறுதான்... உன்னால சுலபமா தாண்ட முடி யும்! வா, தாண்டிப் போவோம்... அம்மா முயல் தாண்டுவதற்குத் தயாரானது. சின்னு, என்னால தாண்ட முடியாதும்மா... வா, திரும்பிப் போயிடலாம்! அம்மா முயல், சின்னுவைப் பார்த்தது. என்ன சின்னு இப்படிச் சொல்றே? இங்கே பார்... உன்னால ஆத்தைத் தாண்ட முடியும்! வீணா பயப்பட்டு, மனசைப் போட்டுக் குழப்பிக்கிறே... இந்த ஆத்தைத் தாண்ட முடியும்னு நம்பு... உன்னால தாண்ட முடியும்! சின்னு, சலசலத்து ஓடும் ஆற்றைப் பார்த்தது. ஆற்றின் அகலம் பத்து அடி இருக்கும். என்னால முடியாதும்மா... என்று சின்னு வேகமாகத் தலையசைத்து மறுத்தது.

சரி சின்னு... இப்ப நான் ஆத்தைத் தாண்டிக் காட்டறேன். அதே மாதிரி நீயும் தாண்டு... என்று சொல்லிவிட்டு, அம்மா முயல் சர்ரென்று ஆற்றைத் தாண்டியது. அம்மா முயல் அக்கரையில் நின்றுகொண்டு சின்னுவைப் பார்த்தது. இப்படித்தான் சின்னு... நீயும் ஆற்றைத் தாண்டி வா! என்னால முடியாதும்மா! என்னை விட்டுடு... என்று சொல்லிவிட்டு, சின்னு கொஞ்சம் பின்னால் நகர்ந்தது. வா சின்னு... இங்கே பாரு, எத்தனை புல்லுனு! மாட்டேன்... என்று தீர்மானமாக மறுத்தது சின்னு. அம்மா முயல் கொஞ்சம் யோசித்தது. சின்னு, அம்மாவை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தது.

திடீரென்று அம்மா முயலின் முகம் மாறியது. சின்னு... ஆபத்து... என்று அலறியது. என்னம்மா? சின்னு அதிர்ச்சியோடு கேட்டது. உனக்குப் பின்னால... உனக்குப் பின்னால... எனக்குப் பின்னால... என்னம்மா? புலி ஒண்ணு வந்துட்டு இருக்குது! எ...என்னது..! பு...புலியா? கண்ணிமைக்கும் நேரம்தான்... சரக்கென்று ஒரே பாய்ச்சல்! ஆற்றைத் தாண்டிய வேகத்தில், சின்னு வேகமாக ஓடத் தொடங்கியது.

சின்னு, சின்னு... ஏய் சின்னு, நில்லு... நில்லு... என்று கத்திக்கொண்டே அம்மா முயல் சின்னுவின் பின்னால் ஓடியது. சின்னு திரும்பிப் பார்க்காமல் ஓடியது. ஏய் சின்னு... நில்லு! புலியும் இல்லே... எலியும் இல்லே... நான் சும்மாத்தான் சொன்னேன்! என்று அம்மா முயல் கத்தியது. ஓடிக்கொண்டிருந்த சின்னு படக்கென்று நின்றது. தயக்கத்தோடு திரும்பிப் பார்த்தது. அட, ஆமா... புலி இல்லே! ஏம்மா புலி வருதுனு சொன்னே? சின்னு... நீ ஆற்றைத் தாண்டிட்டே! ஹே... ஆமா! நான் ஆற்றைத் தாண்டிட்டேன்! சின்னு ஆச்சரியமான உற்சாகத்தோடு எழுந்து நின்று கத்தியது. பார்த்தியா சின்னு... நான் சொன்னேனே, உன்னால தாண்ட முடியும்னு! உன்னால ஆற்றைத் தாண்ட முடியாதுனு நீயா நினைச்சுப் பயந்ததால, உன்னால ஆற்றைத் தாண்ட முடியலே,...

ஆனா, உன் உயிருக்கு ஒரு ஆபத்துனு வந்தபோது, உன்னைக் காப்பாத்திக்க முயற்சி பண்ணி, இந்த ஆற்றைச் சுலபமா தாண் டிட்டே... முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால், எதையும் சாதிக்க முடியும்! என்றது அம்மா முயல்.

------------------------------------------------------------------------------------------------

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக் கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம். கழுதைப் புலியோ, "நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?" என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: "நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்".அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. "ஏன் இங்கே வந்தாய்?" - கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது:

"ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்".குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: "பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?" "மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக" என்றது தாய் கழுதைப்புலி.

நீதி : நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது

------------------------------------------------------------------------------------------------

ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக, ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’’ என்றான் துடைக்க வந்தவன்.

‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கையில் பத்து டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான். பத்து டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.இந்தச் சூழ்நிலையில் ஒரு வங்கிக் கணக்கு திறப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடைய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்...?’’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.‘‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’’ என்றார் வியாபாரி.

நீதி: கம்ப்யூட்டர் அறிவு இருந்தால்தான்சம்பாதிக்க முடியும் என்பதில்லை!

------------------------------------------------------------------------------------------------

வாஜனின் சபதம்!

வாஜன், ஒரு பறவை வேட்டைக்காரன். ஏழை என்றாலும் அவன் ஆசை பெரியது. இந்தோனேஷிய மன்னர் இஷாக்கின் அழகான மகளை மணக்க விரும்பினான். மன்னர் இஷாக் திறமையான வில்வித்தைக்காரர். இளவரசியை தலைசிறந்த வில்வித்தைக்காரனுக்கே மணமுடித்துத் தரப்போவதாக அறிவித்தார். வாஜனுக்கோ வில்வித்தையைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால், அவன் ஒரு திட்டம் தீட்டினான். பறவைகள் சிலவற்றைப் பிடித்த வாஜன், அவற்றின் வலது கண்ணை மட்டும் தோண்டி எடுத்தான். பிறகு அரண்மனைக் கதவுகள் அருகே நின்று அவற்றை விற்கத் துவங்கினான். அவனைச் சுற்றி கூட்டம் கூடியது. அரசர், விசாரிக்கச் சொன்னார்.

வேலையாள், வாஜன் என்பவன் ஒரே ஒரு கண் மட்டுமுள்ள பறவைகளை விற்பதாகத் தெரிவித்தான். அரசர் வாஜனை அழைத்து வரச் சொன்னார். எப்படி உன் பறவைகளுக்கு ஒரே ஒரு கண் மட்டும் உள்ளது? என்றார். வாஜன், அரசே, நான் எப்போதுமே பறவைகளை வலது கண்ணில் மட்டுமே அம்பெய்து கொல்வேன் என்று பதிலளித்தான். வியந்துபோன அரசர், வாஜனுக்கே தன் மகளை மணமுடிக்க முடிவு செய்தார். வாஜன், தான் ஏழை என்றும் ராஜாவின் மகளை வைத்துக் காப்பாற்ற வசதியில்லை என்றும் கூறினான். அவனது நேர்மையைப் பாராட்டிய அரசர், வாஜன் தன் அரண்மனையிலேயே வசிக்கலாமென்றும் கூறினார். இளவரசிக்கும் வாஜனைப் பிடித்துப்போனது. சில வாரங்கள் கழித்து இருவருக்கும் திருமணம் நடந்தது. பெரிய வில்வித்தைக்காரன் தனக்கு மருமகனாகக் கிடைத்திருக்கிறான் என்ற பெருமையோடு, வாஜனை திருமண விழாவில் திரண்டிருந்த மக்கள் முன் அவன் திறமையை நிரூபித்துக் காட்டச் சொன்னார் அரசர். அரசர் தன் வில் அம்புகளை எடுத்துக் கொடுத்தான்.

வாஜன் பயத்தில் நடுங்கினான். வில், அம்புகளை எப்படிப் பிடிப்பது என்றுகூட அவனுக்குத் தெரியாது. வில்லையும் அம்பையும் கையில் பிடித்துக்கொண்டு வெகுநேரம் சும்மா நின்றான். விருந்தினர்கள் பொறுமையிழந்தனர். சிலர் வாஜனை ஏமாற்றுக்காரன் என்று சந்தேகிக்கத் தொடங்கினர். பொறுமையிழந்த விருந்தினர் ஒருவர், சீக்கிரம் அம்பெய்யச் சொல்லி வாஜன் முதுகில் தட்டினார். அப்போது அது வாஜனின் கைகள் அசைந்ததால் அம்பு, வில்லில் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்தது. சரியாக அந்த நேரத்தில் ஒரு கொக்கு பறந்து வந்தது. அம்பு அதனைக் குத்த, கொக்கு கீழே விழுந்து இறந்தது.

அரசர் விரைந்து சென்று இறந்த பறவையைத் தூக்கினார். வாஜனின் அம்பு கொக்கின் மெல்லிய கழுத்தில் குத்தி இருப்பதாகவும் அதன் மூலமே வாஜனின் திறமை தெரிகிறது என்றும் பாராட்டினார். அதனை அனைவரும் ஏற்று வாஜனைப் பாராட்டினார்கள். ஆனால் வாஜனோ கோபமாக இருப்பதுபோல் நடித்தான். அரசே! எப்போதும் நான் பறவைகளின் வலது கண்ணில் மட்டுமே அம்பெய்வேன். ஆனால், விருந்தினர் என் கையைத் தட்டியதால் குறி தவறி பறவையின் கழுத்தில் பட்டது. என் கொள்கையே பாழாகிவிட்டது. இனி நான் வில்லையே தொட மாட்டேன் என்று சபதம் செய்தான். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. சில நாட்களில் வாஜன் அரசனானான். வெகு காலத்துக்கு அவனை, மிகச் சிறந்த வில்வித்தைக்காரன்Õ என்று மக்கள் பேசிக் கொண்டனர்.

------------------------------------------------------------------------------------------------

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்.

"நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்

------------------------------------------------------------------------------------------------

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மிரண்டு மேலே இருந்த எலி, பால் பானைக்குள் விழுந்துவிட்டது.இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் எல்லா பாலும்" என்று நினைத்தது. பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.

நீதி : துன்பத்தில் இருந்து விடுதலை அடைய மற்றவர்களின் ஒத்துழைப்புத் தேவை.

------------------------------------------------------------------------------------------------

ஒரு மாபெரும் கூட்டம்இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று.கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது.கூட்டம் துவங்கியது.அடுத்தவர் குறிப்பை பார்த்தவருக்குத்தான் முதலில் பேச வாய்ப்பு. எதிர் பேச்-சாளர் எழுதி வைத்-திருந்த குறிப்பு-களை-யெல்லாம் எடுத்து தன்னுடைய கருத்துக்கள் போல் பேசினார். ஏக கைதட்டல்.எதிரி பேச்சாளருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அடுத்து அவர் பேசவேண்டும். ஆனால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. என்ன செய்வது? எழுந்தார். மைக்கைப் பிடித்தார்.‘‘முதலில் எனக்கு முன்னால் பேசிய நண்பருக்கு நன்றி தெரி-வித்துக் கொள்கிறேன். எனக்குத் தொண்டைக் கட்டு...- சரியா பேசமுடி-யாது. என்னுடைய உரையை நீங்கள் வாசிக்க முடியுமா என்று கூட்டம் துவங்குவதற்கு முன்பு கேட்டேன். அவர் பெருந் தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்’’ என்று கூறி அமர்ந்தார்.

நீதி: சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுபவன்தான் புத்திசாலி

------------------------------------------------------------------------------------------------

காகதின் அறிவுரை!!!


பால்காரர் முருகனிடம் எருமை ஒன்றும் நான்கு பசு மாடுகளும் இருந்தன. அவருடைய கிராமத்திலும், சுற்றி உள்ள சிறு சிறு கிராமங்களிலும் பாலை விற்றுவந்தார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து தொழுவத்தைச் சுத்தம் செய்வார். மாடு கன்றுகள் குடிப்பதற்குத் தண்ணீரும், சாப்பிட வைக்கோலும் வைப்பார். பாலைக் கறந்தவுடன் குடத்தில் எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர் வீடுகளுக்குச் சென்று கொடுப்பார். முருகனின் மனைவி வள்ளியும் அதிகாலையிலிருந்தே தன் கணவனுக்கு உதவி செய்வாள்.

பாலில் தண்ணீர் கலக்காமல் நேர்மையுடன் விற்றுவந்தார் முருகன். அதனால் கிராமத்து மக்கள் முருகனிடம் பால் வாங்குவதையே விரும்பினார்கள். பாலை விற்று சம்பாதித்து முருகனும், வள்ளியும், இரு பெண் குழந்தைகளுடன் குடும்பத்தை மகிழ்ச்சியுடன் நடத்தி வந்தார்கள். ஒரு நாள் பக்கத்து ஊரில் பால் ஊற்றிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தபோது முனியனைச் சந்தித்தார். ‘‘என்ன முருகா சௌக்கியமா?’’ என்று நலம் விசாரித்து பேசத் தொடங்கினார் முனியன். ‘‘என்ன முருகா, பிழைக்கத் தெரியாத வனா இருக்கிறாயே! உன் இடத்தில் நான் இருந் தால் என்ன செய்வேன் தெரியுமா?’’ என்று பீடிகை போட்டார் முனியன். முனியனும் பால் ஊற்றுபவர்தான். அவர் பக்கத்து ஊரில் இருக்கிறார். முனியனிடமும் மாடுகளும் எருமைகளும் இருந்தன.

ஆனால், பாலில் தண்ணீர் கலக்காமல் விற்கமாட்டார்.அதனால் மக்கள் முனியன் ஊற்றும் பாலை விரும்பவில்லை. முருகனின் பாலைப் பற்றி கேள்விபட்டவர்கள், முனியனின் பாலை நிறுத்திவிட்டு, முருகனிடம் பால் வாங்கத் தொடங்கினார்கள். இதனால் முனியனுக்கு முருகன் மேல் பொறாமை. எப்படியாவது முருகனின் பால் வியாபாரத்தைக் கெடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டு இருந்தார். ஆனால் முருகனுக்கு தன்மேல் முனியன் கொண்டுள்ள தீய எண்ணம் பற்றி எதுவுமே தெரியாது. ‘‘என்ன முனியண்ணே சொல்றீங்க? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே....’’ யதேச்சையாகக் கேட்டார் முருகன். ‘‘ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு ஒரு குறையும் இல்லாம இருக்கிறேன்’’ என்று மீண்டும் இயல்பாகவே சொன்னார் முருகன்.

‘‘முருகா, உனக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்குது. உன் குழந்தைங்க வளர்ந்துகிட்டிருக்காங்க. அவங்களுக்கு செலவே இனிமேலதான். கையில நாலு காசு இருந்தாத்தான் நல்லது. பால்ல கொஞ்சம் தண்ணி கலந்து ஊத்தினாலும் வாங்கறவங்க வாங்கிகிட்டு தான் இருப்பாங்க. கொஞ்சமா தண்ணி கலந்தா ஒண்ணுமே தெரியாது. நான் சரிக்கு சரி தண்ணி கலந்துதான் ஊத்தறேன். என்கிட்ட வாங்காமலா இருக்காங்க? அதனால புத்தியோட பொழச்சுக்கப்பா. அவ்வளவுதான் நான் சொல்லுவேன்’’ சொல்லிவிட்டு முருகனின் முகத்தைப் பார்த்தார் முனியன்.

‘‘என்னமோ, உன் நன்மைக்குத் தான் சொன்னேன். தங்கமா அள்ளிக் கொடுத்தாலும் கிடைக்கிறவரை லாபம்னு வாங்கிட்டுப் போயிடுவாங்க. நஷ்டப்படறது நாமதானே.’’ ‘‘சரிண்ணா, நீங்க சொன்னபடி செய்யறேன்’’என்ற முருகன் தன் வழியே நடந்தார். முருகனின் மனதில் சபலம் புகுந்தது. ‘முனியண்ணன் சொல்வதிலும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. குழந்தைங்க வளர்ந்து கொண்டு இருக்கிறாங்க. இனிமேல் எல்லாமே செலவுதான். ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்து வைத்தால்தானே நாமும் நிம்மதியாக இருக்க முடியும்’ நினைத்துக்கொண்டே முருகன் வீடு வந்து சேர்ந்தார்.

அடுத்தநாள் தண்ணீர் கலந்த பால்குடத்தை சுமந்துகொண்டு அடுத்த கிராமத்துக்குப் புறப்பட்டார். மனதுக்குள் வண்டு புகுந்து துளைப்பது போல இருந்தது. பழைய தெம்பு இல்லை. எதிரே நிற்கும் மரம் கூட பூதம் நிற்பது போலத் தோன்றியது. திடீரென்று தலையில் யாரோ தட்டுவதுபோல இருந்தது. பால்குடத்தைச் சரியாகத் தாங்கிப் பிடிக்க கையை எடுப்பதற்குள், கைதவறி பால்குடம் விழுந்து பால் சிந்திவிட்டது. ‘உன்னை என்ன செய்கிறேன் பார்’, என்று கோபமான முருகன், எறிவதற்கு கல்லை எடுத்தார்.அதற்குள் காகம் பறந்துவிட்டது. வேறு வழியின்றி வீடு வந்த முருகனுக்கு அன்று மனசே சரியில்லை. ‘இனிமேல் தண்ணீர் கலப்பதைத் தவிர வேறு வழி இல்லை. இப்படியெல்லாம் இழப்பு வந்தால், எப்படித்தான் சரிகட்டுவது? இதுவரை இப்படி ஆனதே இல்லை’ என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டு இருந்தார். அடுத்த நாளும் அதே போல தண்ணீர் கலந்த பாலை எடுத்துக் கொண்டு அதே வழியில் சென்றார்.

முந்திய நாளைவிட மனது இன்னும் பாரமாக இருந்தது. எச்சரிக்கையாக பால்குடத்தைப் பிடித்துக்கொண்டே வந்தார். வழியிலிருந்த அதே மரத்தைத் தாண்டிச் செல்வதற்குள், காகம் தலைக்கு மேலே பறந்து வரத் தொடங்கியது. காகத்தைக் கண்டதும் முருகனின் கால்கள் நின்றன.

‘ஏ காகமே, ஏன் இப்படிச் செய்யறே? என் பிழைப்பையே கெடுக்கறியே’, முருகனின் உதடுகள் முணுமுணுத்தன. மீண்டும் காகம் பால்குடத்தை நோக்கிப் பறந்து வந்தது. ‘‘பணத்தாசை வந்துடுச்சு இல்லையா? இவ்வளவு நாள் இல்லாமல், இப்ப இப்படி தண்ணீர் கலந்து விற்பது தப்பு இல்லையா? அநியாயமா சேர்க்கும் பணம் தங்காதுன்னு தெரியாதா?’ ‘காகத்தின் குரல் தானோ, காகம்தான் அறிவுரை சொல்கிறதா?’ ‘ஐயோ.. நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன். இவ்வளவு நாள் இல்லாத பணத்தாசை என்னைக் குழியில தள்ளிடுச்சு’ ‘முனியண்ணன் என் வியாபாரத்தைக் கெடுத்து நாசம் பண்ண பார்த்திருக்கிறாரே, நல்ல வேளை, கடவுளே காகத்தின் வழியா நமக்கு அறிவுரை வழங்கிட்டாரு’ என்று மனம் தெளிவாகி, மீண்டும் பழையபடி தண்ணீர் கலக்காத பாலை எடுத்துக் கொண்டு நடந்த முருகனின் தலைக்கு மேலே நிழல் கொடுத்து காகமும் பறந்து வந்தது!

நேர்வழியில் செல்பவர்களுக்குத் தெய்வம் துணை நிற்கும் என்பது எவ்வளவு பெரிய உண்மை!

------------------------------------------------------------------------------------------------

சின்ன வயசில் படித்த தொப்பி வியாபாரியும் குரங்குகளும் கதையின் புதிய வடிவம் இது.தலைமுறைகள் கடந்து போக, அதே சரித்திரம் திரும்புகிறது. தொப்பி வியாபாரியின் எள்ளுப் பேரன் ஒருவன், தாத்தாவைப் போலவே தொப்பி வியாபாரம் செய்கிறான். வியாபாரத்துக்காக வெளியூர் சென்றபோது, நிழலுக்காக தாத்தா ஒதுங் கிய அதே மரத்தின் கீழ் இவனும் ஒதுங்க வேண்டிவருகிறது. தாத்தா போலவே தூங்கியும் விடுகிறான். தாத்தா காலத்தைப் போலவே மரத்தின் மேலிருக்கும் குரங்குகள் இறங்கி வந்து அவனது கூடையிலிருந்த தொப்பிகளையெல்லாம் தூக்கிக்கொண்டு போய் விடுகின்றன.தூக்கம் கலைந்தவன், தன் தொப்பிகள் பறிபோனதைப் பார்க்கிறான்.ஆனால், தான் கேள்விப்பட்டிருந்த தாத்தா கதை நினைவுக்கு வர, உள்ளூர ஒரு தெம்பு வருகிறது.

தாத்தா காலத்து வித்தை பலிக்கிறதா என்று பார்க்க, குரங்குகளைப் பார்த்தபடி தன் தலையை தேய்க்கிறான். என்ன ஆச்சரியம், மரத்திலிருந்த குரங்குகளும் அப்படியே தலையைத் தேய்த்தன. இனி பிரச்னை இல்லை என்று உற்சாகமானவன் தன் தலையிலிருந்த தொப்பியை எடுத்துக் கீழே வீசினான். குரங்குகளும் அந்த தொப்பிகளை வீசும் என்று எதிர்பார்த்தால்.. ம்ஹம்.. குரங்குகளிடம் ஒரு அசைவில்லை. ஒரு குரங்கு மட்டும் மின்னல் வேகத்தில் இறங்கி வந்து அவன் வீசிய தொப்பியையும் எடுத்துக்கொண்டு போய்விட்டது.

மேலே போன அந்த குரங்கு அவனிடம் சொன்னது...

''உங்களுக்கு மட்டும்தான் தாத்தாக்கள் இருக்கிறார்களா? எங்களுக்கும் உண்டு!

------------------------------------------------------------------------------------------------

பாவம்... மாடு என்ன செய்யும்?

ஹரியும் நானும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். பரீட்சை முடிந்து பள்ளிக்கு விடுமுறை என்பதால் இருவரும் அவரவர் பெற்றோர்களுக்கு உதவி செய்ய எண்ணினோம். இருவர் வீடுகளிலும் மாடுகள் வளர்ப்பதால் அவற்றை மேய்ப்பதில் உதவி செய்ய முடிவு செய்தோம். அவ்வாறு தினமும் மேய்க்கச் செல்லும்போது ஹரிக்குக் கெட்ட பழக்கம் ஒன்று இருந்தது. மாடுகளை புல்வெளியில் மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாரி மற்றும் அவன் நண்பர்களுடன் சேர்ந்து காசு வைத்து கோலி விளையாட சென்றுவிடுவான். நான் அவனிடம் பலமுறை கூறியிருக்கிறேன் அவ்வாறு செய்வது தவறு என்று.

ஆனால், அவன் அதை காதில் வாங்கிக்கொண்டால்தானே..? டேய் ஹரி! மாடுகளை இப்படிக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அவை வழி தவறக்கூடும். அதே சமயம், நீ இப்படிக் காசு வைத்து விளையாடுவது மிகவும் தவறான செயல் என்று கண்டித்தேன். அதற்கு நான் என்ன ஐம்பது பைசா, ஒரு ரூபாய் வைத்துத்தானே விளையாடுகிறேன்... இது ஒன்றும் பெரிய தொகை அல்ல என்று எப்போதும் போல சமாளித்துக் கூறிவிடுவான். என் வார்த்தைக்கு மதிப்பும் இல்லை... பிரயோஜனமும் இல்லை என்று கூறுவதை நிறுத்திவிட்டேன். ஒருநாள் நல்ல உச்சி வெயில். சூரிய வெப்பம் மிகக் கடுமையாக இருந்ததால் அனல் காற்று வீசியது. நான் புளிய மரத்தடியில் கதைப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது மற்றொரு நண்பன் சிவா பதற்றமாக ஓடிவந்ததைக் கண்டு நானும் திகைப்புடன் அவனைப் பார்த்தேன். சங்கர்... ஹரி எங்கே? கார் ஒன்று அவன் பசு மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகி விட்டது! என்றான். இதைக் கேட்டவுடன் எனக்கு எதுவுமே பேச முடியாமல் வாயடைத்துப் போனேன். நானும் சிவாவும் ஹரி விளையாடிக் கொண்டிருக்கும் இடத்துக்கு ஓடினோம். நான் நினைத்தது போல ஹரியும் அவன் நண்பர்களும் சத்தமிட்டபடி உற்சாகமாக கோலி விளையாடிக் கொண்டிருந்தார்கள். டேய் ஹரி! உன் மாடு காரில் அடிபட்டு விட்டது! என்றேன். அனைவரும் சாலையை நோக்கி ஓடினோம். சாலையின் நடுவில் மாடு அடிபட்டுக் கிடந்தது. மக்கள் அதைச் சுற்றி கூட்டமாக நின்றிருந்தனர். மாட்டின் மீது மோதிய கார் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து கிடந்தது. காரினுள் இருந்தவர்கள் தட்டுத்தடுமாறி காரின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் காயத்துடன் கிடந்தனர்.

விபத்தை முதலில் கண்ட ஒரு பெரியவர், காரினுள் நிறைய பொருட்கள் வைத்திருப்பார்கள் போல... பெட்டி பெட்டியாக இருக்கிறது. அந்தப் பெட்டி களிடையே சிக்கிக்கொண்டதால் இன்னும் காயம் பலமாக இருக்கலாம் என்றார். இன்னொரு கிராமவாசி, கார் ஓட்டுநர் வேகத்தை ஓரளவுதான் குறைக்க முடிந்தது. பசுமாடு திடீரென்று குறுக்கே வந்ததால் கார் திசைமாறி சாலையை விட்டு விலகி பள்ளத்தில் இறங்கிவிட்டது. பசுமாடு என்ன செய்யும்? பாவம்! அது ஐந்தறிவு உள்ள விலங்குதானே?

மாடு மேய்ப்பவனைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்! நான் மட்டும் அவனைப் பார்த்தால்... நல்லா நாலு வார்த்தை கேட்பேன். அவனுடைய கவனக்குறை வினால் இப்படி ஒரு விபத்து நடந்துவிட்டதே! என்று ஆத்திரப்பட்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டுதான் நானும் ஹரியின் நண்பர்களும் கூட்டத்தினரிடையே இருந்தோம். சங்கர்! உன் பேச்சைக் கேட்டிருந்தால் இந்த விபத்து நடந்திருக்குமா? இப்போது பார்த்தாயா... எத்தனை உயிர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கின்றன? எல்லாம் என்னுடைய விளையாட்டுப் புத்தி, கவனக்குறைவினால் வந்தது... என்று ஹரி பெருங்குரலெடுத்து அழுதான்.

இனிமேல் எதுவும் செய்ய முடியாது. அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கலாம், வா..!

இனிமேலாவது கவனத்துடன் இரு! என்றேன்.

------------------------------------------------------------------------------------------------

குரங்கு எங்கே படுக்கும்?


அந்த பெண்மணிக்கு வீட்டில் போரடித்தது. ஏதாவது செல்லப்பிராணியை வளர்க்கலாம் என்று ஆசை. ஆனால் கணவன் எதிர்த்தான். ஒரு தடவை அவன் ஆபீஸ் வேலையாக சில நாட்கள் வெளியூர் போயிருந்தபோது அவள் ஒரு குரங்கை வாங்கிவந்து வளர்க்கத் தொடங்கிவிட்டாள்.வீட்டுக்குத் திரும்பிய கணவன், குரங்கைப் பார்த்துக் கோபமடைந்தான். இதற்கு என்ன சாப்பாடு கொடுத்து வளர்ப்பாய்?�� என்று டென்ஷனாக கத்தினான்.மனைவி அமைதியாக சொன்னாள்: நாம் சாப்பிடும் அதே சாப்பாட்டை அதுவும் சாப்பிடும்! இந்த சனியன் எங்கே தூங்கும்?�� ��நாம் படுக்கும் அதே படுக்கையில் ஒரு மூலையில்!நாற்றம் சகிக்காதே!மனைவி நிதானமாக பதில் சொன்னாள். ��கவலைப்படாதீர்கள்!

இருபது வருஷங்களாக நானே உங்கள் நாற்றத்தை தாங்கிக் கொண்டிருக்கும்போது, இந்த குட்டிக் குரங்கா சமாளித்துக் கொள்ளாது?�� பிறர் குறைகளையே பெரிதாக நினைக்கிறோம்.

நமது குறைகளை நாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை.

------------------------------------------------------------------------------------------------

வித்தியாசமான உதவி


ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டதுசட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான்தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார்.

மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்று கோபத்துடன் கேட்டான்.பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு "நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்" என்று எச்சரித்தான்.பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். "ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?" என்றான்.பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே "தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்" என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.பெரியவர் விளக்கினார்.

"நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை.

உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது.்" என்று சொல்லி சென்றார்.

நீதி: பயத்தை போக்கினால் எதையும் வெல்லலாம்

------------------------------------------------------------------------------------------------

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. 'எதைத் துரத்தலாம்' என்று தயங்கி நின்றது. பிறகு, 'சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்' என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.உடனே சிறுத்தை "அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி... புள்ளி மானைப் பிடிக்கலாம்" என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

நீதி : முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------------------

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா "இரண்டடி" என்று சொல்வதற்கு பதிலாக "ஓரடி" என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.'இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்' என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் 'சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்' என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி : உழைப்பால் வரும் பயனைத்தான் மிகப்பெரிய புதையல்

------------------------------------------------------------------------------------------------

குருவைப் பார்க்க வந்தான் ஒருவன். அவன் முகம் வாடியிருந்தது.‘‘என்ன ஆயிற்று?’’ என்று கேட்டார் குரு.‘‘ஒருவனைக் கோபத்தில் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டேன். அவன் மிகவும் மனம் ஒடிந்து போய்விட்டான். இப்போது எனக்கு வருத்தமாயிருக்கிறது.

’’‘‘அப்படியா?’’‘‘

ஆமாம். இப்போது நான் திட்டியதை நிவர்த்தி செய்ய விரும்புகிறேன். அதற்கு என்ன செய்யவேண்டும்?’’குரு மெலிதாய்ச் சிரித்தார்.‘

‘போ... ஒரு மூட்டை பஞ்சு வாங்கு. அதை ஏதாவது உயரமான இடத்திலிருந்து கீழே கொட்டு. பிறகு பறந்துபோன பஞ்சையெல்லாம் ஒன்றுவிடாமல் எடுத்து மூட்டை கட்டிவா. சொல்கிறேன்’’ என்றார்.போனவன் ஒரு மணி நேரத்தில் வேகமாய்த் திரும்பி வந்தான்.

‘‘குருவேஇ பறந்துபோன பஞ்சைச் சேகரிக்க இயலவில்லை’’ என்றான்.

‘‘வாயிலிருந்து வரும் வார்த்தைகளும் அப்படியே. கொட்டிவிட்டால் எடுக்க முடியாது’’ என்றார் குரு.

------------------------------------------------------------------------------------------------

செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித் தது.

இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான்.அங்கே... எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன்,

'ஐயோ... இது வேண்டாம்' என்று அடுத்த அறைக்குத் தாவினான்.மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். 'ஆஹா.. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே' என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான்.'நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்' என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல்..

''ஓகே.!

உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள்!''

------------------------------------------------------------------------------------------------

அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அவர் முன் திடீரென்று ஒரு தேவதை தோன்றியது. வழக்கம்போல, ''மூன்று வரங்கள் தருகிறேன், கேள் என்றது.
ஊழியர் த்ரில்லாகிவிட்டார். அந்தத் தேவதையைப் பாதம் தொட்டு வணங்கியவர், ''நான் பணக்காரனாகணும் தாயே.. என்று தனது முதல் விருப்பத்தைச் சொன்னார். அடுத்த விநாடியே அவரைச் சுற்றிக் கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகள்! ''ம்.. அடுத்தது..?
' - கேட்டது தேவதை.

''அப்புறம்..'' என்று தயங்கியவர், ''ஓர் அழகிய தீவில் பேரழகி ஒருத்தியோடு நான் உல்லாசமாக இருக்க வேண்டும்�� என்றார். அடுத்த விநாடியே, இயற்கை ராஜ்ஜியம் நடத்தும் அழகிய தீவில் ஒரு பெண்ணோடு அவர் இறக்கிவிடப்பட்டார்.''மூன்றாவது வரம் ஒன்று பாக்கி இருக்கிறது.

''தாயே.. இனிமே நான் வேலையே செய்யாம சும்மா இருக்கணும்... என்று அவர் சொல்லவும்...


அடடா... அடுத்து அந்த அரசு ஊழியர் இருந்தது அவரது பழைய ஆபீஸ் ஸீட்டில்!

------------------------------------------------------------------------------------------------

முதல் இடம்


சுந்தரியின் மகள் கவிதா பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவதாக வந்திருக்க, முதல் இடத்தைப் பிடித்தது, வேலைக்காரியின் மகள் அமிர்தா! இதை ஏதோ தனக்கு ஏற்பட்ட மானக்கேடாகவே எண்ணி, அன்றைக்கே வேலைக்காரியை நிறுத்திவிட்டாள் சுந்தரி. ‘‘என்னம்மா நீங்க, பாடங்கள்ல எனக்குத் தெரியாத சந்தேகங்களை எல்லாம் நான் அமிர்தாகிட்டேதான் கேட்டுத் தெரிஞ்சுப்பேன்.

அவ மட்டும் இல்லேன்னா, ஸ்கூல்ல நான் பத்தாவதாவோ பதினஞ்சா வதாவோதான் வந்திருப்பேன். இப்ப அவ அம்மாவை நீங்க வேலையை விட்டு நிறுத் திட்டீங்கன்னதும், அமிர்தா என்கிட்டே முகம் கொடுத்தே பேச மாட்டேங்கறா!’’ என்று கவிதா சிணுங்கவும், ‘அப்படியா விஷயம்’ என, மீண்டும் தேவியை வேலைக்கு வரச் சொன்னாள் சுந்தரி. மறுநாள் ஸ்கூலில்... ‘‘நடந்ததெல்லாம் அம்மா சொன்னாங்க கவிதா! உனக்கு நான் எதுவுமே சொல்லிக்கொடுக்கலே! இருந் தாலும், எங்க கஷ்டம் புரிஞ்சு, எனக்காகப் பொய் சொல்லி, மறுபடியும் அம்மாவை வேலைக்கு எடுத்துக்க வெச்சிருக்கே. ரொம்பத் தேங்க்ஸ்!’’& கவிதாவின் கை பற்றி, நெகிழ்ந்தாள் அமிர்தா.

------------------------------------------------------------------------------------------------

ரெஸ்ட் டாரண்ட்டில் தன் எதிரில் வந்து அமர்ந்தவளின் அழகில் மயங்கினான் அவன். இதயம் துடிக்க, கைகால்கள் படபடக்க.. உணர்ச்சிமயமாக இருந்தவனுக்கு.. பேச்சும் வர வில்லை.சர்வரை அழைத்து, 'காபிக்கு கொஞ்சம் சர்க்கரை கொண்டுவா' என்று சொல்ல நினைத்தவன், நாக்கு குழறி 'கொஞ்சம் உப்பு கொண்டு வா' என்றான். சர்வர் திகைத்தார். வார்த்தை தவறியது மறு விநாடியே அவனுக்குப் புரிந்து விட்டது என்றாலும் அழகியின் எதிரில் தன் இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள, 'ஆமா.. உப்புதான் கேட்டேன். கொண்டு வா!'' என்றான் சர்வரிடம்.

அழகிக்கு ஆச்சரியம். காபியில் உப்பு போட்டு சாப்பிடுவதா? விசாரித்தாள். அவனோ உடனடி கதை ஒன்றை அவிழ்த்துவிட்டான்.''கடலோர மீனவ கிராமம் ஒன்றில் பிறந்தவன் நான். இப்ப டவுன்ல வசதியா இருந்தா லும் அப்பாவும் அம்மாவும் அந்தக் கிராமத்தை விட்டு வரமாட்டேங்கிறாங்க. அவங்க நினைப்பும் ஊரு நினைப்பும் என்னைவிட்டுப் போயிடக் கூடாதுங்கிறதால காபியில உப்பு போட்டுக்கறேன்!''அவனது பெற்றோர் பாசமும் ஊர் பற்றுதலும் அவளை ஈர்த்தது. அடுத்தடுத்து அவளே வந்து வலிய சந்தித்ததில் காதல் வளர்ந்து கல்யாணமும் முடிந்தது.

நாற்பது ஆண்டுகால தாம்பத்தியத்துக்குப் பிறகு அவன் இறந்துவிட, அவனது பெட்டியில் ஒரு கடிதத்தைக் கண்டாள் அவள்.'ஸாரி டார்லிங்! ஒரு பொய் சொல்லிவிட்டேன். நமது முதல் சந்திப்பின்போது காபிக்கு நான் உப்பு கேட்டது என் உளறல். சொன்ன சொல்லைக் காப்பாற்ற வாழ்க்கை முழுக்க நான் காபியில் உப்பு சேர்த்துக்கொண்டாலும்.. அன்று சொன்ன பொய் என்னை நெருடுகிறது..!'பின் குறிப்பு: 'நீ மட்டும் கிடைப்பதாக இருந்தால் அடுத்த ஜென்மத்திலும் உப்பு காபி சாப்பிட நான் தயார்!'பிறிதொரு நாள்.. அவள் காபியில் உப்பு சேர்த்துக்கொண்ட போது, ''உப்பு கரிக்கலையா?'' என்று கேட்டார் ஒருவர்.''இனிப்பாக இருக்கிறது!'' என்றாள் அவள்.

நீதி: சுவை என்பது நாக்கில் மட்டுமல்ல... மனதிலும் இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------

வேட்டை


காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள் இரண்டு நண்பர்கள். போன இடத்தில் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்து விட்டார். கண்கள் செருகியிருக்க, அவரிடமிருந்து எந்த ஒரு அசைவும் இல்லை. பதறிப்போன இன்னொரு ஆள் உடனே அவசர உதவி மையத்துக்கு செல்போன் போட்டார். ''என் நண்பர் இறந்துவிட்டார். இப்போ நான் என்ன செய்வது?'' என்று கேட்டார். மையத்தில் இருந்தவர் இவரை அமைதிப் படுத்தும் விதமாக, ''ஓகே. கூல்டௌன்... நான் உதவி பண்றேன்.

முதல்ல உங்க நண்பர் இறந்துட்டாரான்னு உறுதிப்படுத்திக்கணும்'' என்று ஆரம்பித்தார் இதமான குரலில். அடுத்து மறுமுனையில் ஆழ்ந்த அமைதி. சில விநாடிகளிலேயே அந்த அமைதியைக் கிழித்தது துப்பாக்கி வெடிக்கும் சத்தம்! இப்போது போனில் வேட்டைக்காரரின் குரல் மீண்டும் ஒலித்தது: '

'ஓகே. இப்ப சொல்லுங்க. நான் என்ன செய்யட்டும்?''

------------------------------------------------------------------------------------------------

இந்தியனின் மூளை


நியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற வங்கிக்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த அதிகாரியிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும் தான் இந்தியாவிற்கு இரண்டு வாரப் பயணமாக செல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.அதற்கு அந்த அதிகாரி, உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது உத்தரவாதம் கொடுக்கவேண்டும் என்றார். இதைக் கேட்ட அந்த இந்தியர் வங்கிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த தனது புத்தம்புதிய ஃபெராரி கார் சாவியை அந்த அதிகாரியிடம் கொடுத்தார். கூடவே காரின் உரிமைப் பத்திரங்களையும் கொடுத்தார்.

வங்கி அதிகாரி திருப்தியுடன் அந்த இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார்.250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின் தலைவரும் மற்ற அதிகாரிகளும் அனுபவித்து சிரித்தனர். பிறகு வங்கியின் ஊழியர் ஒருவர் அந்தக் காரை வங்கியின் கீழ்தளத்தில் உள்ள கார்கள் நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார்.இரண்டு வாரங்கள் கழித்து திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் அதற்கான வட்டியாக 5.41 டாலரயும் திருப்பிக்கொடுத்தார்.

அவருக்கு கடன் கொடுத்த அந்த வங்கி அதிகாரி, "சார், உங்களுடன் வியாபாரம் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. நமது பரிவர்த்தனை மிக நல்ல முறையில் நடந்தது. ஆனா ஒரே ஒரு விசயம்தான் எங்களுக்கு இன்னும் புரியலெ, நீங்க போன பிறகு உங்களைப் பத்தி நாங்க விசாரிச்சோம். நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது. இவ்வளவும் பெரிய பணக்காரர் கேவலம் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்" என்றார்.அதற்கு அந்த இந்தியர், "எனக்கு நியூயார்க் நகரத்தில் கார் நிறுத்தும் வசதி இல்லை. பிறகு எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை இவ்வளவு குறைந்த 5.41 டாலர் கட்டணத்திற்கு அதுவும் நான் திரும்பி வரும் வரை யாரும் திருடிக்கொண்டுப் போகாமல் பாதுகாப்பாக நிறுத்த முடியும்" என்றார்.

------------------------------------------------------------------------------------------------

'என்னக்கென்ன?'


எப்போதோ படித்த கதை……..

ஒரு வெள்ளைக்கார விவசாயியின் விவசாயப்பண்ணையில்நடந்த கதை.அங்கு ஒரு சுண்டெலி இருந்தது.ஒருநாள் பண்ணைவீட்டின் சமையற்கட்டில் ஓர் எலிஇடுக்கியைப் பார்த்துவிட்டது.நமக்காகத்தான் இதை வைத்திருக்கிறார்கள். ர்கள். மாட்டிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற என்றபயத்தில் அது ஓடிப்போய் அந்தப் பண்ணையில் இருந்தகோழியிடம் முறையிட்டது. அது எலியின் நெருங்கிய சகா.சமையற்கட்டில் ஒரு எலி இருக்கிறது"கோழிஅதைக் கேட்டுவிட்டு, "அது எனக்காக வைக்கல்ல. எனக்கென்ன?" என்றது. சுண்டெலி அங்கிருந்த பன்றியிடம் முறையிட்டது.எனக்கென்ன?" என்று சொல்லிவிட்டுப் பன்றிபோய்விட்டது. அதுவும் ஒரு நண்பன்தான்.பண்ணையின் காளை மாடுதான் அங்கிருந்த பிராணிகளில்பெரியது. அதனிடம் சென்று அழுதது.மாடோ,"நீ அதில் விழாமல் இருக்க உனக்காக பிரார்த்திக்கிறேன்.

மற்றபடி அதனால் எனக்கென்ன?"சென்று சொல்லிவிட்டது. அன்று இரவு தூங்காமல் சுண்டெலிஅழுதுகொண்டும் பயந்து கொண்டும் தன் வளையில் பதுங்கிக்கொண்டிருந்தது.திடீரென்று படீரென்று ஒரு சப்தம். இடுக்கியில் ஏதோ விழுந்துவிட்டது. அடுத்த நாள் காலை சமையற்கட்டிற்குள் சென்ற விவசாயியின்மனைவி எலி இடுக்கியைப் பார்க்கச் சென்றாள். ஆனால் அதில்மாட்டியிருந்தது, ஒரு பாம்பு. வால் மட்டுமே மாட்டிக்கொண்டிருந்ததால்வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. விவசாயியின் மனைவி அருகில் வரவும் அவளுடைய காலில் ஒருபோடு போட்டுவிட்டது. விவசாயி தன்னுடைய மனைவியைப் பாம்பு கடித்துவிட்டதைஅறிந்து முதல் உதவி செய்தான். வைத்தியரிடமும் காட்டி மாற்றுமருந்தைக் கொடுத்தனர். வீட்டில் விவசாயியின் மனைவி ரொம்பவும் பலவீனமாகப் படுத்திருந்தாள். பக்கத்துப் பண்ணைக் கிழவி சில வேர்களையும் மூலிகைகளையும்கொண்டுவந்தாள். கோழியைப் பிடித்து வெட்டி, அதை சூப் வைத்தாள்.

மூலிகைகளைஅதில் போட்டு வேகவைத்து விவசாயி மனைவிக்குக் கொடுத்தாள்.அவளைப் பார்க்க இஷ்டமித்திர பந்துக்கள் எனப்படும் சுற்றமும் நட்பும் வந்தார்கள். வெளியூர் ஆட்களும் அங்கு வந்து தங்கினார்கள். அவர்களுக்கெல்லாம் சாப்பாடுபோடவேண்டியிருந்தது. ஆகவே பன்றியை அடித்தார்கள். பிரட்டல், வறுவல், அது, இதுஎன்று ஆக்கி வைத்துக்கொண்டு எல்லாரும் சாப்பிட்டார்கள். விவசாயி தன்னுடைய மனைவி நலமாக ஆகவேண்டும் என்றுவேண்டுதல் செய்துகொண்டான். சீக்கிரமே மனைவி நலமாகினாள்.

ஆகவே ஊரையே கூட்டி அழைத்து ஒரு பெரிய நன்றி காட்டும்விருந்துக்கு ஏற்பாடு செய்தான். அவர்களுடைய வழக்கம் அது.காளை மாட்டை அடித்தார்கள். அதுதான் அந்த வந்தனை செய்யும்விருந்தின் முக்கிய அயிட்டம்.இது அத்தனையையும் தன்னுடைய வளையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தது அந்தச் சிறிய சுண்டெலி.

------------------------------------------------------------------------------------------------

ஒரு எளிமையான கதை

அதே சமயத்தில் ஆழமான சிந்தனை


தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர். சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது ஒரு பெரிய கூஜாவில் காப்பியையும் பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார். அவை பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி கோப்பையென சில விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும் சில சாதாரணமாகவும் பலவிதங்களில் இருந்தன.

பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார், நண்பர்களே கவனியுங்கள்"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள். மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள். உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன. அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சினனகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.""உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி, கோப்பையல்ல.

ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.""இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள். இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள். இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.""பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைப்பதால் காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.

""ஆகவே நண்பர்களே கோப்பையில் உங்கள் கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை அனுபவியுங்கள்."