22 October 2008

சொந்தங்களின் சோக நிலை

http://www.tubetamil.com/view_video.php?viewkey=81761421d5e1e0c3de25

வெறும் ஐந்தே நிமிடங்கள் இக்குறும்படத்தை பார்த்த எனக்கு கண்கள் குளமாயின, நெஞ்சம் புண்ணாயின. என்னவென்று சொல்வது எம்மக்கள் படும் அவலத்தை பார்த்து. கோர்வையாய் பேச தெரிய வில்லை எனக்கு. விடையும் சொல்ல தெரிய வில்லை எனக்கு.


மற்றவன் வீட்டு மரணத்திற்கு அழாவிட்டாலும் பரவா இல்லை என் வீட்டிலே இவ்வாறான தொடர் மரணங்கள் அதும் கொடும் மரணங்கள் நடக்கும் பொது கூட அமைதியாய் இருந்தால் எப்படி.
என் வீட்டில் உள்ளவர்களை எமனுக்கு காவு கொடுத்து விட்டு எஞ்சி இருப்பவர்களோடு எவ்வளவு நாள் நிமதியாய் காலம் கடத்த முடியும். உறவுகளை தொலைத்து விட்டு இந்தியன் என்று சொல்லி கொள்வதில் எனகென்ன பெருமை இருக்க முடியும்.


தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்த காலம் போய் தமிழன் என்பதை மறைத்து தலையை காப்பற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டு விட்டனரவே எம் ஈழ தமிழ் மக்கள். இருந்தும் தன்மானத்தோடு தமிழின மானம் காக்க வீரத்தோடு போராடும் எம்மக்களை தட்டி கொடுக்க ஆளில்லாமல் தவியாய் தவிக்கின்றனரே ஈழத்து வீரர்கள்.


சினம் கொண்ட சிங்கங்களாய், வீரிய எரிமலையாய் வெடித்து, சூழ்நிலைக்கு ஆயுதம் ஏந்தி போராடும் நம் வீரர்களுக்கு, இருக்கும் தடைகளை நீக்கி ஆதரவு மட்டும் கொடுத்தால் போதுமே, இன படுகொலைக்கு முற்று புள்ளி வைத்து விடலாமே....



முடிவு யார் கையில்??


1) தமிழகத்தில் தன் கட்சியை எப்படி முன்னேற்றுவது என்பதை மட்டும் குறிகோளாய் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் கையிலா?


2) தன் முன்னேற்றம் தன் வீடு என்று சுகமாய் வாழ்ந்து கொண்டு, எந்த கட்சி என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலேயே ஒட்டு போட்டு தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கும் மக்கள் கையிலா??


என்னிடத்திலும் பதில் இல்லை... தெரிந்தவர்கள் சொல்லலாம்.


என் பதிவை படிக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை தயவு செய்து ஈழ தமிழரின் கஷ்டத்தை வெளி காட்டி இருக்கும் இக்குறும்படத்தை பரவ செய்யுங்கள், மற்றவரும் பார்க்க செய்யுங்கள். இனிமேலும் சிந்திக்காமல் இருந்தால் வெறும் வரைபடத்தை வைத்து கொண்டு வருங்காலத்தில் தமிழனின் வரலாறு மட்டும் பேச முடியும்.

பிரபு

09 October 2008

டாக்டர் ஜோக்ஸ்

நோயாளி:- டாக்டர், என்னோட எல்லா பல்லையும் கிளியர் பண்ணனும்"

டாக்டர்:- சரி, சரி அதுக்கு முன்னால பழைய `பில்லை' கிளியர் பண்ணுங்க!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஆபரேஷன் முடிச்சுட்டு வந்த டாக்டர்ட்ட பேஷண்ட் எப்படி இருக்கார்ன்னு கேட்டேன்.

ஒரு விரலைத் தூக்கி காட்டிட்டு போறாரே.. ஒருநாள் போனாதான் சொல்லமுடியும்ன்னு சொல்றாரா..?

இல்லே.. அவர் கிரிக்கெட் அம்பயராகவும் இருக்கார்..! அந்த ஞாபகத்தில் சொல்லியிருப்பார்..!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

டாக்டர்- உங்க மாமியாருக்கு இந்த மருந்துகளை 1 மாதம் தினமும் தரணும், நிறுத்தினால் மரணம் நிச்சயம்..

மருமகள்- அப்படியானால் 1 தினத்திற்கு மட்டும் மாத்திரை வாங்கினா போதுமா டாக்டர்...?

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

நோயாளி:- சொத்து பத்து எக்கச்சக்கமா இருந்தும் என்ன பண்றது டாக்டர்..? கிட்னியிலே கல்லு இருக்கே?

டாக்டர்:- கவலைப் படாதீங்க .. எல்லாத்தையும் கரைச்சுடுவோம்!

=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

ஒருவர்‍: டாக்டர் என்னை ஞாபகம் இருக்கா

டாக்டர்‍: என்ன..... இப்படி கேட்டுட்டிங்க.....ஆபரேஷனுக்கு இடையில் அய்யோ....அம்மா....என்னை காப்பாத்துங்கன்னு சொல்லி தப்பிச்சு உயிர் பிழைச்சு போயீட்டிங்களே.....மறக்க முடியுமா..?

__________________

என்ன டாக்டர் என்னோட முதுகில் ஏதோ எழுதறீங்க...?

வேறென்ன..? எக்ஸ்பைரி டேட் தான்...!

__________________

பேஷன்ட்‍: என்ன டாக்டர் மொத்த மாத்திரையும் எடுத்திட்டு ஒத்தையா இரட்டையான்னு கேட்கறீங்க

டாக்டர்‍: கரெக்டா சொன்னா நீங்க மாத்திரை சாப்பிட வேணாம்.... தப்பா சொன்னா இவ்வளவையும் சாப்பிடனும்

.__________________

என்ன சிஸ்டர்..? டாக்டர் மருந்து சீட்டு பின்பக்கம் எழுதியிருக்காரே..?

முதுகு வலின்னு வந்தீங்களா..? எங்க டாக்டர் அப்படித்தான்..?

___________________

கவலைப்படாதீங்கம்மா.. இந்த மாத்திரையெல்லாம் சாப்பிட்டா உங்க மாமியாரோட வியாதி தீர்ந்து போயிடும்..

வியாதி மட்டும் தீர்ந்து என்ன பிரயோசனம் டாக்டர்..?

___________________

தெரியுமா சேதி..? இந்தியா ஒலிம்பிக்குல தங்கம் வாங்கியிருக்கு..!

இதை ஏன் டாக்டர் இப்போ சொல்றீங்க..?

நீங்கதானே, ஆபரேஷன் முடிச்சுட்டு வந்து நல்ல சேதி சொல்லுங்க டாக்டர்ன்னு கேட்டுகிட்டீங்க..!

___________________

சிஸ்டர்.. நாளைக்கு ஆபரேஷன் பண்ணிக்கப்போற அந்தப் பேஷண்டை கொஞ்சம் கண்டிச்சு வைங்க..

ஏன் டாக்டர்.. என்ன செஞ்சார்..?

இன்னிக்கு ஆபரேஷன் பண்ணிக்கப்போற பக்கத்து பெட் முனியம்மாவைப் பார்த்து "நீ முன்னாடி போ.. நான் பின்னாலே வாரேன்னு பாடறார்..!

____________________

டாக்டர்.. இடுப்பு வலி.. குனிய முடியல..

மண்டையில் அடிபட்டுடுச்சு..

வாசல் நிலையில் இடிச்சுகிட்டீங்களா..?

இல்லே டாக்டர்.. என் சம்சாரம் பாத்திரத்தை வீசி அடிச்சுட்டா..!

____________________

சொன்னா கேளுங்கம்மா.. உங்க மாமியார் மனசில என்ன இருக்குன்னு ஸ்கேன் பண்ணி கண்டுபிடிக்க முடியாது..!

____________________

நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!

டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.

____________________

டாக்டர் ஏன் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ட தேடி பதட்டமா அலையறாரு?

ரீசன் ஃபார் டெத்-ங்கற எடத்துல தெரியாம அவரோட கையெழுத்த போட்டுட்டாராம்.

__________________

எக்ஸ்ரே படத்தைப் பார்த்துத்தான் ரிசல்ட் சொல்லிட்டேனே...

ஏன் அதை திரும்ப கொண்டு வந்திருக்கிறீர்?''

''இவ்வளவு பணம் செலவழிச்சு எடுத்த படத்தை ஏன் அந்த டாக்டர் கலர்லே எடுத்துத் தரலேன்னு எம் பொஞ்சாதி திட்டறா டாக்டர்!'

__________________

டாக்டர் நோயாளியிடம் : டாக்டர்கிட்ட உண்மையை மறைக்க கூடாதுங்கிறது உண்மைதான், அதுக்காக 'டாக்டர் உங்களுக்கு சுத்தமா மூளையில்லை'னு அடிக்கடி சொல்றது கொஞ்சம் கூட நல்லாயில்லே

__________________

"பை-பாஸ் ஆபரேஷன் செய்தேனே எப்படி இருக்கு?"

"மூக்காலே பார்க்கிறேன். காதால சுவாசிக்கிறேன் டாக்டர்...."

__________________

டாக்டர் நோயாளியை பார்த்து .....

நீங்க ரொம்ப வருஷமா என்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்க வர்றீங்க ஒத்துக்கறேன்... அதுக்காக வெயிட்டிங்கில இருக்கற பேஷன்ட் கிட்ட என்ன வியாதின்னு கேட்டு நீங்களே மருந்து சொல்றதெல்லாம் கொஞ்சம்கூட நியாயமில்ல சார்.

__________________

டாக்டர்... உங்களுக்கு கன‌வுகளில் நம்பிக்கை உண்டா..?

இல்லியே.. என்ன திடீர்ன்னு கேட்கறீங்க சிஸ்டர் .

உங்களுக்கு நம்பிக்கை இருக்கா.?

இதுவரை இருந்தது.. நேற்று நீங்க‌ ஆபரேஷன் பண்ற மாதிரியும், அது சக்சஸ் ஆகிற மாதிரியும் கனவு வந்துச்சு.. அதான் சந்தேகமா இருக்கு..!

___________________

மருமகள் : வர வர மாமியார் தொல்லைஅதிகமாகப்போச்சு ஆப்ரேஷன் தேதி சொன்னிங்கன்னா கொஞ்சம் நிம்மதியா இருக்கும்

டாக்டர்.டாக்டர் : ?.................?..............?

___________________

ஆபரேஷன் தியேட்டரில் நர்ஸ்,

நோயாளியிடம்..இதோ பாருங்க.. இது தியேட்டர்தான்..

அதுக்குன்னு, டாக்டர் இன்னும் வரலேங்கறதுக்காக விசில் அடிக்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்..!

___________________

டாக்டர்- டாக்டர் கிட்ட எதையும் மறைக்கக் கூடாது உண்மையைச் சொல்லனும்.

பேஷண்ட்-பேமானி உன்கிட்ட வந்தாலே பணத்தை புடுங்கிருவாயாம்.. சாவு கிராக்கி.. இருமல் டாக்டர் இரண்டு நாளா!

டாக்டர்- ?...?.....?.....?

__________________

எதுக்கு டாக்டர் ஒரு சிம்பிள் ஆபரேஷனுக்குப் போய் அந்த டாக்டர், இந்த டாக்டர்னு நிறைய பேரை கூப்படறீங்க?

எனக்கு ஆபரேஷன் ரூமுக்குள்ள தனியா போகவே ரொம்ப பயம். அதுக்குத்தான் இவ்ளோ பேரைக் கூட்டிக்கிறேன்.

__________________

அரசர் ஜோக்ஸ்

அமைச்சர்: அரசே! நீங்கள் எதையோ பார்த்து பயந்துள்ளீர்கள்!

அரசன்: ஆம்! நேற்று அரசியாரை முகத்துக்கு நேரே பார்த்து விட்டேன்!

============

அமைச்சர்: அரசே! நேற்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்த திருடன் உங்களைப் போலவே இருந்தான்!

அரசர்: அப்படியா? ஒருவேலை நான் இரவில் நகர்வலம் போகும் போது திருடினேனோ என்னவோ?

============

அரசர் : ராணியின் கூந்தலுக்கு செயற்கை மணமா? இல்லை இயற்கை மணம? என்பதற்கு ஏன் ராணி கோபமாக உள்ளார்?

அமைச்சர்: ராணிக்கு தான் கூந்தலே இல்லையே மன்னா! யாருடைய கூந்தலை நுகர்ந்து விட்டு இப்படி உங்களுக்கு சந்தேகம் வந்ததோ?

============

அமைச்சர்: ஏன் தளபதி பதவிக்கு வேலை கேட்டு வந்தவனை போகச் சொல்லிவிட்டீர்கள்?

அரசர்: "நானும் உங்களைப் போலவே மிகச் சிறந்த வீரன்" என்று சொன்னான்.

============

அரசர்: அமைச்சரே! வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது!

தளபதி: என்னைப் பார்த்து "அமைச்சர்" என்று கூப்பிடும் போதே தெரிகிறது! ]

============

அமைச்சர்: அரசே! உங்கள் வாள் எங்கே?

அரசர்: பழைய இரும்பு கடையில் பேரிச்சம் பழத்துக்கு விற்று விட்டேன்!

============

அமைச்சர்: அரசே! உண்மை தெரிந்து விட்டது! உங்கள் சாயம் வெளுத்துவிட்டது!

அரசர்: நினச்சேன். ஒரு பொற்காசுக்கு 2 ஆடைகள் வாங்கும் போதே எனக்கு சந்தேகம்!

============

அரசி: வீரமே! வீரத்தின் விளை நிலமே! போர்க்களம் பல கண்ட பொன் வண்ணனே!

அரசர்: என்னைக் கூப்பிடுகிறாயா? இல்லை அங்கே நிற்கும் காவலாளியைக் கூப்பிடுகிறாயா?

============

அரசி: அரசே! உங்களின் வீரத்தில் மயங்கிவிட்டேன்!

அரசர்: அரசியே! நானும் உந்தன் அழகில் கிரங்கிவிட்டேன்!

அமைச்சர்: கருமம்! என்றைக்கு தான் நீங்கள் இருவரும் உண்மை பேசப் போகிறீர்களோ?

============

புலவர்: வேலெடுத்து போர் புரியும் வெற்றி வீரனே! கொடுத்து கொடுத்து கை சிவந்த கொடை வள்ளளே!

அரசர்: நாலு காசு வாங்குவதற்காக, நாக்கு கூசாமல் பொய் சொல்லுவியா நீ?

===========

அமைச்சர்: அரசே! நாம் ஏன் வெள்ளையனுக்கு கப்பம் கட்ட வேண்டும்?

அரசர்: இல்லையென்றால், அவன் நமக்கு சமாதி கட்டி விடுவான்!

===========

தளபதி: வாருங்கள் அரசே! வெள்ளையருடன் போரிட்டு மடிவோம்!

அரசர்: போரிட்டால் மடிவோம் என்று தெரிந்தும், ஏன் போரிட வேண்டும் தளபதியே?

===========

அமைச்சர்: அரசே! போர் முரசு ஒலிக்கிறது. உங்கள் காதில் விழவில்லையா?

அரசர்: கேட்கிறது. என்ன செய்ய? காதைப் பொற்றிக் கொள்ளவா?

===========

அமைச்சர்: அரசே! எதிர் மன்னன் போர் முரசு கொட்டி விட்டான்!

அரசர் : கொட்டி விட்டானா? கொட்டியதை எதை வைத்து அள்ளப் போகிறான்?

===========

அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?

அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!

அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!

அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!

அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!

============

அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!

அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!

============

அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?

அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?

அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!

============

புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?

அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!

============

அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் அவனே தன் கைப்பட "ஓலை ஓலை" எழுதி அனுப்பியுள்ளான்.

அரசன்: அமைச்சரே! எனக்கு படிக்கத் தெரியாது என்பதை குத்தி காட்டியது போதும். படித்துத் தொலையுங்கள் ஓலையை!

=============

அமைச்சர்: அரசே! அந்த மூன்றாவது தெருவில் நம் கஜானாவை வைத்தால் என்ன?

அரசன்: ம்ம்ம்ம்ம்ம்...

அமைச்சர்: என்ன அரசே யோசனை?

அரசன்: இல்லை...உனது வீடு அதற்கு பக்கத்தில் இருப்பதால் தான் யோசிக்கிறேன்!

=============

அமைச்சர்: அரசே! இனிமேல் எருமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!

அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?

அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!

============

தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!

அரசன்: அப்பாடா!

தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.

அரசன்: அடப்பாவிகளா!

============

அரசன்: நாட்டில் மழை பொழிந்ததா?அமைச்சர்: இல்லை.

அரசன்: என்னது இல்லையா? நேற்றைக்கு தானே மழை பொழிந்தது!

அமைச்சர்: அதான் தெரியுதில்லே ! அப்பறம் எதுக்கு சும்மா சும்மா கேள்வி கேட்டு தொல்லை செய்கிறீர்கள் அரசே!

============

அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் நம் மீது போர் எடுத்து நிற்கிறான்!

அரசன்: நன்றி கெட்டவன்! போன மாசம் தானே காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்டேன். அதற்குள் என்ன அவசரம்?

============

அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...

அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்று நேரடியாக கேளுங்களேன்!

============