09 October 2008

அரசர் ஜோக்ஸ்

அமைச்சர்: அரசே! நீங்கள் எதையோ பார்த்து பயந்துள்ளீர்கள்!

அரசன்: ஆம்! நேற்று அரசியாரை முகத்துக்கு நேரே பார்த்து விட்டேன்!

============

அமைச்சர்: அரசே! நேற்றிரவு எங்கள் வீட்டிற்கு வந்த திருடன் உங்களைப் போலவே இருந்தான்!

அரசர்: அப்படியா? ஒருவேலை நான் இரவில் நகர்வலம் போகும் போது திருடினேனோ என்னவோ?

============

அரசர் : ராணியின் கூந்தலுக்கு செயற்கை மணமா? இல்லை இயற்கை மணம? என்பதற்கு ஏன் ராணி கோபமாக உள்ளார்?

அமைச்சர்: ராணிக்கு தான் கூந்தலே இல்லையே மன்னா! யாருடைய கூந்தலை நுகர்ந்து விட்டு இப்படி உங்களுக்கு சந்தேகம் வந்ததோ?

============

அமைச்சர்: ஏன் தளபதி பதவிக்கு வேலை கேட்டு வந்தவனை போகச் சொல்லிவிட்டீர்கள்?

அரசர்: "நானும் உங்களைப் போலவே மிகச் சிறந்த வீரன்" என்று சொன்னான்.

============

அரசர்: அமைச்சரே! வர வர எனக்கு ஞாபக மறதி அதிகமாகி விட்டது!

தளபதி: என்னைப் பார்த்து "அமைச்சர்" என்று கூப்பிடும் போதே தெரிகிறது! ]

============

அமைச்சர்: அரசே! உங்கள் வாள் எங்கே?

அரசர்: பழைய இரும்பு கடையில் பேரிச்சம் பழத்துக்கு விற்று விட்டேன்!

============

அமைச்சர்: அரசே! உண்மை தெரிந்து விட்டது! உங்கள் சாயம் வெளுத்துவிட்டது!

அரசர்: நினச்சேன். ஒரு பொற்காசுக்கு 2 ஆடைகள் வாங்கும் போதே எனக்கு சந்தேகம்!

============

அரசி: வீரமே! வீரத்தின் விளை நிலமே! போர்க்களம் பல கண்ட பொன் வண்ணனே!

அரசர்: என்னைக் கூப்பிடுகிறாயா? இல்லை அங்கே நிற்கும் காவலாளியைக் கூப்பிடுகிறாயா?

============

அரசி: அரசே! உங்களின் வீரத்தில் மயங்கிவிட்டேன்!

அரசர்: அரசியே! நானும் உந்தன் அழகில் கிரங்கிவிட்டேன்!

அமைச்சர்: கருமம்! என்றைக்கு தான் நீங்கள் இருவரும் உண்மை பேசப் போகிறீர்களோ?

============

புலவர்: வேலெடுத்து போர் புரியும் வெற்றி வீரனே! கொடுத்து கொடுத்து கை சிவந்த கொடை வள்ளளே!

அரசர்: நாலு காசு வாங்குவதற்காக, நாக்கு கூசாமல் பொய் சொல்லுவியா நீ?

===========

அமைச்சர்: அரசே! நாம் ஏன் வெள்ளையனுக்கு கப்பம் கட்ட வேண்டும்?

அரசர்: இல்லையென்றால், அவன் நமக்கு சமாதி கட்டி விடுவான்!

===========

தளபதி: வாருங்கள் அரசே! வெள்ளையருடன் போரிட்டு மடிவோம்!

அரசர்: போரிட்டால் மடிவோம் என்று தெரிந்தும், ஏன் போரிட வேண்டும் தளபதியே?

===========

அமைச்சர்: அரசே! போர் முரசு ஒலிக்கிறது. உங்கள் காதில் விழவில்லையா?

அரசர்: கேட்கிறது. என்ன செய்ய? காதைப் பொற்றிக் கொள்ளவா?

===========

அமைச்சர்: அரசே! எதிர் மன்னன் போர் முரசு கொட்டி விட்டான்!

அரசர் : கொட்டி விட்டானா? கொட்டியதை எதை வைத்து அள்ளப் போகிறான்?

===========

அமைச்சர்: அரசே! இன்று இரவு நகர் வலம் போகலாமா?

அரசர்: வேண்டாம் அமைச்சரே! போன தடவை சென்ற போது, என்னை மக்கள் திருடன் என நினைத்து கட்டி வைத்து அடித்ததை நினைத்தால், ஈரக் குழி நடுங்குகிறது!

அமைச்சர்: இந்த தடவை அப்படி நடக்காது அரசே!

அரசர்: எப்படி சொல்கிறீர்கள்!

அமைச்சர்: இந்த தடவை நான் பணம் கொடுத்து யாரையும் ரெடி பண்ணி வைக்கவில்லை அரசே!

============

அரசர்: என்ன அமைச்சரே? நாடு முழுக்க ஒரே பரபரப்பு! ஒரே வெடி சத்தம்! என் பிறந்த நாள் கூட இன்றில்லையே!

அமைச்சர்: யாரோ நீங்கள் இறந்து விட்டதாக வதந்தி பரப்பி விட்டான், அரசே!

============

அமைச்சர்: அரசே! வாயிக்குள் விரலை விட்டு இப்படி விசில் அடிக்காதீர்கள்?

அரசர்: ஏன்? சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறதா?

அமைச்சர்: இல்லை ! என் மேல் உங்கள் எச்சில் படுகிறது!

============

புலவர்: அரசே! என் பாடலுக்காக பரிசு கொடுத்தீர்கள். இப்போது நீங்கள் ஏன் பாடுகிறீர்கள்?

அரசர்: கொடுத்த பரிசுகளை திருப்பி வாங்கத் தான்!

============

அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் அவனே தன் கைப்பட "ஓலை ஓலை" எழுதி அனுப்பியுள்ளான்.

அரசன்: அமைச்சரே! எனக்கு படிக்கத் தெரியாது என்பதை குத்தி காட்டியது போதும். படித்துத் தொலையுங்கள் ஓலையை!

=============

அமைச்சர்: அரசே! அந்த மூன்றாவது தெருவில் நம் கஜானாவை வைத்தால் என்ன?

அரசன்: ம்ம்ம்ம்ம்ம்...

அமைச்சர்: என்ன அரசே யோசனை?

அரசன்: இல்லை...உனது வீடு அதற்கு பக்கத்தில் இருப்பதால் தான் யோசிக்கிறேன்!

=============

அமைச்சர்: அரசே! இனிமேல் எருமை மாட்டுப் பண்ணை பக்கம் போகாதீர்கள்!

அரசன்: ஏன் அமைச்சரே? மாடுகள் என்னை முட்டி விடும் என்ற அக்கரையா?

அமைச்சர்: இல்லை அரசே! உங்களுக்கும், அதற்கும் வித்தியாசம் தெரியாமல், நான் அடிக்கடி confuse ஆகி விடுகிறேன்!

============

தளபதி: அரசியார் கோவிலுக்கு சென்ற போது, நம் எதிரிகள் கோயிலை கைப்பற்றி விட்டார்கள் அரசே!

அரசன்: அப்பாடா!

தளபதி: பிறகு, நாங்கள் போரிட்டு அரசியாரை மீட்டு வந்து விட்டோம்.

அரசன்: அடப்பாவிகளா!

============

அரசன்: நாட்டில் மழை பொழிந்ததா?அமைச்சர்: இல்லை.

அரசன்: என்னது இல்லையா? நேற்றைக்கு தானே மழை பொழிந்தது!

அமைச்சர்: அதான் தெரியுதில்லே ! அப்பறம் எதுக்கு சும்மா சும்மா கேள்வி கேட்டு தொல்லை செய்கிறீர்கள் அரசே!

============

அமைச்சர்: அரசே! பக்கத்து நாட்டு அரசன் நம் மீது போர் எடுத்து நிற்கிறான்!

அரசன்: நன்றி கெட்டவன்! போன மாசம் தானே காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்டேன். அதற்குள் என்ன அவசரம்?

============

அமைச்சர்: மன்னா! நீ வாழ்க! உன் கொடை வாழ்க! உன் கொற்றம் வாழ்க! உன்...

அரசன்: நிறுத்துங்கள் அமைச்சரே போதும்! செலவுக்கு பணம் வேண்டும் என்று நேரடியாக கேளுங்களேன்!

============

No comments: