22 October 2008

சொந்தங்களின் சோக நிலை

http://www.tubetamil.com/view_video.php?viewkey=81761421d5e1e0c3de25

வெறும் ஐந்தே நிமிடங்கள் இக்குறும்படத்தை பார்த்த எனக்கு கண்கள் குளமாயின, நெஞ்சம் புண்ணாயின. என்னவென்று சொல்வது எம்மக்கள் படும் அவலத்தை பார்த்து. கோர்வையாய் பேச தெரிய வில்லை எனக்கு. விடையும் சொல்ல தெரிய வில்லை எனக்கு.


மற்றவன் வீட்டு மரணத்திற்கு அழாவிட்டாலும் பரவா இல்லை என் வீட்டிலே இவ்வாறான தொடர் மரணங்கள் அதும் கொடும் மரணங்கள் நடக்கும் பொது கூட அமைதியாய் இருந்தால் எப்படி.
என் வீட்டில் உள்ளவர்களை எமனுக்கு காவு கொடுத்து விட்டு எஞ்சி இருப்பவர்களோடு எவ்வளவு நாள் நிமதியாய் காலம் கடத்த முடியும். உறவுகளை தொலைத்து விட்டு இந்தியன் என்று சொல்லி கொள்வதில் எனகென்ன பெருமை இருக்க முடியும்.


தமிழன் என்று சொல்லி தலை நிமிர்ந்த காலம் போய் தமிழன் என்பதை மறைத்து தலையை காப்பற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டு விட்டனரவே எம் ஈழ தமிழ் மக்கள். இருந்தும் தன்மானத்தோடு தமிழின மானம் காக்க வீரத்தோடு போராடும் எம்மக்களை தட்டி கொடுக்க ஆளில்லாமல் தவியாய் தவிக்கின்றனரே ஈழத்து வீரர்கள்.


சினம் கொண்ட சிங்கங்களாய், வீரிய எரிமலையாய் வெடித்து, சூழ்நிலைக்கு ஆயுதம் ஏந்தி போராடும் நம் வீரர்களுக்கு, இருக்கும் தடைகளை நீக்கி ஆதரவு மட்டும் கொடுத்தால் போதுமே, இன படுகொலைக்கு முற்று புள்ளி வைத்து விடலாமே....



முடிவு யார் கையில்??


1) தமிழகத்தில் தன் கட்சியை எப்படி முன்னேற்றுவது என்பதை மட்டும் குறிகோளாய் கொண்டிருக்கும் அரசியல் தலைவர்கள் கையிலா?


2) தன் முன்னேற்றம் தன் வீடு என்று சுகமாய் வாழ்ந்து கொண்டு, எந்த கட்சி என்ன செய்கிறார்கள் என்று தெரியாமலேயே ஒட்டு போட்டு தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கும் மக்கள் கையிலா??


என்னிடத்திலும் பதில் இல்லை... தெரிந்தவர்கள் சொல்லலாம்.


என் பதிவை படிக்க வேண்டும் என்பது முக்கியம் இல்லை தயவு செய்து ஈழ தமிழரின் கஷ்டத்தை வெளி காட்டி இருக்கும் இக்குறும்படத்தை பரவ செய்யுங்கள், மற்றவரும் பார்க்க செய்யுங்கள். இனிமேலும் சிந்திக்காமல் இருந்தால் வெறும் வரைபடத்தை வைத்து கொண்டு வருங்காலத்தில் தமிழனின் வரலாறு மட்டும் பேச முடியும்.

பிரபு

4 comments:

Anonymous said...

தாங்கள் அனுப்பிய குறிப்பை+குறும்படத்தை கண்டேன்,கண்ணில் நீர் மல்கியது.ஆனால் சிங்கள தமிழர்களின் பிரச்சினை யாராலும் தீர்க்கப்பட முடியாது காரணம் நீங்கள் கூறியதுபோல் இங்குள்ள அரசியல்வாதிகளின் இரட்டை வேடம்இலங்கை அரசின் அடாவடிபோக்கும் ஈழ தமிழர்களின் தலைவர் செய்த சில் பெரிய தப்பும் இதற்க்கு காரணம் ஆகிறது தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கம் என்று தெரிந்துமிந்தியாவின் பிரதம மந்திரியை கொன்றது மிக பெரிய முட்டாள் தனமான செயல் அல்லவா. IPPODHU அதே பிரதம் மந்திரியின்மனைவியின் தலைமையின் கீழ் நடை பெற்று வரும ARASU எப்படயுதவி செய்யும் என்பதே IPPODHU நம் முன் இருக்கும் முக்கிய கேள்வி இலங்கள் தமிழ் சகோதரர்களினவள நிலை கண்டுபென்னிர்க்கே உரிய இரக்க குணத்துடன் சோனியா காந்தி செயல் பட்டால் இலங்கை தமிழர்களின் பிரச்சினை ஒரே நாளில்தீர்ந்து விடும் இல்லையேல் தனக்கு இருக்குமரசியல் பலத்தை வைத்து sonia மேல் பிரஷர் தர வேண்டும் செய்வாரா கருணாநிதி பாவம் அவருக்கு IPPODHU அவர் மகனை அரியணை yera செய்வதே பெரிய பொறுப்பு.

நான் பிரபாகரனுக்கு சொல்லும் ஒரே அறிவுரை
தன்சுய கௌரவத்தை விட்டு,தினம் மடியும் தமிழ் சகோதர்களின் நலனுக்கு வேண்டி சோனியாவிற்கு ஒரு வேண்டுகோள் விடுப்பது மிகுத்தம பலனை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை
செய்வாரா பிரபாகரன்
INDRIYA நிலையில் நாளைய positionai பாருங்கள்
இப்போரில் வென்றால் நம் இனமே வெல்லும்
தோல்வி கண்டால் நம் சகோதரர்கள் இலங்கையில் நிரந்தர அடிமைகள் தான் இன்றைய முக்கிய தேவை prestige அல்ல. தலைவனுக்கு உரிய சாணக்கிய புத்தி காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலையும் பிடிக்க தயாராக வேண்டும். பிடிப்பாரா பிரபாகரன்
பிடித்தால் உலகதமிழ் இனமே பிரபாகரனை கண்டு தலை வணங்கும்
காரணம் அவன் தன்னிகரற்ற தலைவன்.

sa. pe. thi. ARASU

Anonymous said...

Well, i visited that link and also viewed the video...

I can't go through it fully in the first time... I really need some breaks... That video made me to feel guilty...in all the ways...

Here I came to share a lot of thoughts with you to share...

But after reading Respected Mr.sa. pe. thi's comments, I feel there will be no more comments needed...

Sir is perfectly right....

2hrs travelling time'la ippadi oru avalam nadakiratha ninaikirappa, undamu lasea nadunguthu....vaarthaika varavillai...kanneer thuligal than varuginradhu...

Video paarkira anaivarukum kanner varuvathil ulla ottrumai, ean indha avalathai ethirthu kural kuduka vara marukirathu....???!!!

Jegan,:

Anonymous said...

நண்பர்கள் என்னை மன்னிக்கவும். எனக்கு தனிப்பட்ட முறையில் தாங்கள் பதிந்த இக்கருத்துகளை இங்க பதிவிட்டமைக்கு

பிரபு

pugal said...

யார் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் ஈழம் பிறந்தே தீரும்