22 May 2009

கலைஞரின் மஞ்சள் துண்டு பேரம்

போன மச்சான் திரும்பி வந்தான்!

மந்திரிசபையில மஞ்சள் துண்டு போட்டு இடம் பிடிக்க சென்ற தமிழின தலைவர் வெறுங்கையுடன் திரும்பியுள்ளதாக தெரிகிறது.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் 'திருப்தி' அளிப்பதாக திருவாய் மலர்ந்த தமிழின தலைவர் சீட்டு பேரத்தில் திருப்திக்கு பதிலாக காங்கிரஸ் 'திருப்பதி' அளிப்பதாக கூறி சென்னைக்கு டிக்கெட்டு போட்டு இருக்கிறார்.

வெளியே இருந்து ஆதரவு என்பதன் மூலம் கூட்டணிக்கு உள்ளே இருந்து எதிர்ப்பு என்பது தெளிவாகிறது. நாளைக்கு முரசொலியில் இதுபத்தி உடன்பிறப்பிற்கு விளாவரியாக கவிதை எழுதி கண்ணீர் விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன செய்யபோகிறார் வாழும் வள்ளுவர் என்று பொறுத்து இருந்து பார்ப்போம் எப்படியாவது பேரம் பேசி மறுபடியும் சீட்டு பிடிப்பார் என்று ஒரு பேச்சு இருக்கிறது.

இப்போதைக்கு போன மச்சான் திரும்பி வந்தான் கோவணத்தோட என்று தெளிவாகிறது.

இது ஓர்குட்டில் நண்பர் ஒருவர் பதிவிட்டது.

நான் தனிப்பட்ட முறையில் இது நாள் வரைக்கும் எந்த ஒரு (ஓட்டு பொறுக்கி) அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவித்து இல்லை. மேலும் ஓட்டு போடும் வயது வந்த சில வருடங்களில் லண்டன் வந்து விட்டதால் அதற்கான வாய்ப்பும் இல்லாமலே தான் போய் விட்டது. பாமரர்களில் ஒருவனாய் என்னுடைய கேள்வி இது தான். லட்ச கணக்கில் மக்கள் ஈழத்தில் செத்து விழுந்த போது கூட வெறும் ௨ மணி நேரம் உன்ன விரதம் என்ற பெயரவில் ஒரு நாடகத்தை அரங்கேற்றிய நம் மாண்புமிகு முதல்வர், அதற்கடுத்த வந்த நாட்களில் தனது உடல் நிலை மிக மோசமாக உள்ளதாகவே காட்டி கொண்டார். அதற்கு தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இருந்ததாலோ அல்லது தனது குடும்பத்தை அதிகாரத்தில் அமர வைக்கும் போது மக்கள் தம் மீது பரிதாப பட வேண்டும் என்பதாலோ தெரியாது .... ஆனால் தேர்தல் முடிந்த இரெண்டே நாளில் வெற்றிகளிப்பில் முதல்வர் வெகு விரைவிலேயே குணமாகி விட்டது மட்டும் இல்லாமல் பல்லாயிரம் மைல்கள் சென்று பேரம் பேசி இருக்கிறார். இப்பொழுது நண்பர் சொன்னது போல் அங்கும் மஞ்சள் துண்டு பேர நாடகம் தோல்வியில் முடிந்தாலும் நிச்சயம் நம் முதல்வர் தான் நினைத்ததை சாதித்து காட்டுவார் என்றே நம்புகிறேன்.

லட்ச கணக்கில் மக்கள் ஈழத்தில் செத்து விழுந்த போது கூட காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவை திரும்ப பெறாத அல்லது பெற கூட விரும்பாத நம் முதல்வர் தன குடும்பத்துக்கு தான் கேட்ட மந்திரி பதவி கிடைக்க வில்லை என்றதும் வெளியில் இருந்து ஆதரவு என்று சொன்னாரே பார்க்கலாம்.... என்னே அவரது தமிழ் பாசம் !!!தமிழ் பற்று !!!! தமிழ் மக்கள் மீதான அக்கறை.

இவ்விடயத்தில் நான் ஜெயலலிதா அம்மாவையோ, கோபால்சாமி அண்ணனையோ, ராமதாஸ் மாமவையோ குறை கூற முடிய வில்லை. ஏனெனில் அவர்கள் கட்டவிழ்த்து விட்ட உண்மையான அல்லது பொய்யான பிரசாரங்களை நம்பாமல் மக்களே அவர்களுக்கு தண்டனை கொடுத்து விட்டனர். மேலும் அவர்கள் இப்பொழுது பல் பிடுங்க பட்ட பாம்பு. அதிகாரமில்லாதவர்களை என்னவென்று கேட்பது.

அதனால் தான் தமிழின தலைவன், தன்மான சிங்கம், அரசியல் சானகியன் தலைவர் தாத்தா அவர்களை கேட்க வேண்டியதை இருக்கிறது.

நீர் சாவதற்குள் தமிழ் மக்களுக்கு என்ன செய்வதை உத்தேசம். உமது குடும்ப மக்களை தமிழகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் அரசர்களாக்கி எமது மக்களை அவர்களுக்கு அடிமைகளாக ஆக்குவதை விட.....


pirabu

No comments: