22 November 2010

நாடும் இந்நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் !!!!


3rd generation high tech கொள்ளை!!!2G Spectrum scandal!!!

ஏன்டா எவனோ நாட்ட கொள்ளை அடிச்சதுக்கு இப்படி ஒரு தலைப்புனு கேக்கறீங்களா!!! நாம ஒட்டு போட்டு அனுப்பிய மகாராசன் பண்ணிய வேலைக்கு நாம தானே பொறுப்பு. அதனால தான் இப்படி ஒரு சாபம், அதுவும் நாம வாங்கிட்ட சாபம்..


என்ன நடக்கிறது நம் இந்திய நாட்டில், அதுவும் குறிப்பாக நம் தமிழ் நாட்டில், தமிழக அரசியல் தலைவர்களின் புண்ணியத்தால்!!! இப்படியும் நடக்குமா ?? இவ்வளவு பணமும் தான் கொள்ளை அடிக்க முடியுமா என்று நினைக்க கூட முடியாத அளவுக்கு ஊழல். நடந்து முடிந்த வரலாறு காணாத, உலகம் கண்டிராத ஊழலை பற்றி மறுபடியும் நான் பெரிதாக, புதிதாக எடுத்துரைக்க தேவை இல்லை. வலை உலகத்தில் ஊழல் என்று தட்டினாலே முதலில் வருவது இச்செய்தியாய் தான் இருக்கும். இருந்தாலும் இதோ ஒரு சில உங்களுக்காக!!!

http://www.domain-b.com/industry/telecom/20101122_2g_scandal.html

http://www.bbc.co.uk/news/world-south-asia-11764415

இது வெறும் அனுமானத்தின் அடிப்படையில் சாற்றப்பட்ட குற்றச்சாற்று தானாம் !! திருவாளர் ராஜா அவர்கள் அனைத்தையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே கலைஞரின் உத்தரவுகேற்ற செவ்வனே செய்து முடித்து (நாட்டையே முடித்து) விட்டதாக சொல்கிறார்கள்.

மேலே குடுக்கப்பட்ட லிங்கில் உள்ள செய்தியை படித்த பின்பு மேலும் இது சம்பந்தப்பட்ட செய்தியை எங்கிருந்து வேண்டுமானாலும் சேகரித்து கொள்ளலாம். கீழே குடுக்க பட்ட லிங்கில் உள்ள உரையாடலை கேட்ட பின்பு அது உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பதையும் தன் சொந்த பகுத்தறிவு வைத்தே முடிவும் செய்து கொள்ளலாம். இது அவரவர் விருபத்திற்கு விட்டு விடலாம். இருந்தாலும் நாட்டின் அரசியலை பற்றி பெரிதும் கவலை ஏதும் இல்லாவிட்டாலும் நாட்டை பற்றி சிறிதேனும் கவலை படும் சாதாரண குடிமகனாய், என்னுடைய பகுத்தறிவு என்ன சொல்கிறது என்பதை மட்டும் நான் சொல்லி கொள்ள கடமை பட்டுள்ளேன்.

http://www.youtube.com/watch?v=6qXnxSxVaR4

இதுவரை படித்த செய்திகளும் தற்போது கேட்ட தொலை பேசி உரையாலடல்களையும் கூட்டி கழித்து பார்த்தால் 1 .76 லட்சம் கோடி என்ற கணக்கு வேண்டுமானால் தப்பாக போகலாமே தவிர கண்டிப்பாய் சில பல ஆயிரம் கோடிகளை நம் தலைவர்கள் ஏப்பம் விட்டது தெளிவாக தெரிகிறது. இதுவரை வெளி வந்த ஆதாரங்கள் வெறும் ஒரு சில விழுகாடுகளே. வெளி வர இருப்பது அல்லது வெளி வராமலேயே போக இருக்கும் ஆதாரங்கள் கண்டீப்பாக பல விழுக்காடுகள்.

உண்மையில் 1 .76 லட்சம் கோடி ஊழல் நடக்காமல் இருந்து இருக்கலாம் ஆனால் ஊழால் நடக்கவே இல்லை என்று சொல்ல முடியுமா?? ஆதாரம் எங்கே என்று கேட்பவர்கள் நீதிபதிகளாய் இருந்தால் பரவா இல்லை !! சரி பாவம் அவர் சட்டப்படி தண்டனை குடுக்க சாட்சி கேக்கிறார் என்று நம்மை நாமே சமாதான படுத்தி கொள்ளலாம். பாமரர்கள் சாட்சி கேட்டால் ஐயோ பாவம் படிக்காதவர்கள், இன்றில்லாவிட்டாலும் நாளையாவுது புரிந்து கொள்வார்கள் என்று சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் சாட்சி கேட்பதோ நாலும் தெரிந்த, படித்த, வலை தளத்தில் நித்தமும் வளைய வரும் மேதாவிகள் (என்னுள் உள்பட).

நாட்டின் அதுவும் குறிப்பாக தமிழ் நாட்டில் தற்போதைய நிலைமை என்னவென்று என்னுடன் லண்டனில் படித்து விட்டு பெரிய அளவில் தொழில் செய்து தன்னுடைய பரம்பரை தொழிலை மேலும் மேம்படுத்தும் கனவோடு இந்திய திரும்பிய சிலரின் புலம்பல்களில் இருந்து தெளிவாகவே தெரிந்தது இனிமேல் நான் கண்டிப்பாக வரும் காலத்தில் எந்த ஒரு தொழிலையும் தங்க தமிழ் நாட்டில் தொடங்கவும் முடியாது அப்படியே தொடங்கினாலும் தற்போது உள்ள வாரிசு அரசியலின் உள்ளூர் கட்டுமானத்தை மீறி அதை நல்ல விதமாக நடத்தவும் முடியாது. தமிழகத்தின் அத்துணை பெரிய நகரங்களிலும் வாரிசுகள் தற்போது குடியேறி அவர்களுக்குள் சமாதானம் பேசி பெருந்தன்மையாக பாகம் பிரித்து கொண்டார்கள். சரி இதற்கும் இப்போது நடந்த அல்லது நடந்து முடிந்ததாக சொல்லப்படும் ஊழலுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? என்ன செய்வது எதாவுது சொல்லி புலம்புவதை தவிர எனக்கு வேறு வழி தெரிய வில்லை.

இதற்கு முடிவு தான் என்ன !!! கண்டீப்பாக விடை என்னிடம் இல்லை ஆனால் கண்டீப்பாக வாரிசு அரசியலை இனிமேலும் அனுமதித்தால் நாம் என்றுமே வெள்ளைகாரனக்கு வேலை பார்த்து அடிமையாகவே இருந்து, வாழ்ந்து , கடைசியில் அப்படியே சாக வேண்டியது தான். நாட்டின் நட்பை பார்த்தால் படித்த பலரும் அதை தான் விரும்புகிறோம் என்றே நினைக்க தோன்றுகிறது. அடித்த கொள்ளையில் சாதி பார்த்தா பங்கு பிரித்தார்கள், இதில் சாதி சாயம் பூசி சட்டத்தில் இருந்து வேண்டுமானால் தப்பித்து கொள்ளலாம் ஆனால் கண்டிப்பாக ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். கடவுளை நம்புவோர் கடவுளிடம் வேண்டுங்கள் நம்பாதவர்கள் உங்களால் இதற்கு ஒரு தீர்வு காண முடியுமென்றால் தயவு செய்து இனிமேலாவுது அதற்கான முயற்சிகளை எடுங்கள்.

இப்படிக்கு

வலைத்தளத்தில் வெட்டியாய் பொழுதை கழித்தாலும் நாட்டின் மீது கொண்ட உண்மையான கரிசனத்தில்

பிரபு

பின் குறிப்பு : நான் கண்டிப்பாக A . I . A . D . M . K ஆளு இல்லீங்கோ




சும்மா லுள்ளுலாயிக்கு

தற்போது ஜூ.வி இல் படித்தது -----

''என்னடா மச்சான்... வரப்போற சட்டமன்றத் தேர்தல் முடிவை 'ஸ்பெக்ட்ரம்' பாதிக்குமா? நீ என்ன நினைக்கிறே?''

''உனக்கு நம்ம ஜனங்களைப்பத்தி சரியா புரியலைனு நினைக்கிறேன். 'ஸ்பெக்ட்ரம்னா என்ன... புது பிராண்டு ரம் வந்திருக்கா'னு கேப்பாங்க!''

''அங்கேதான் நீ தப்பு பண்றே... கலைஞர் குடுத்த இலவச டி.வி-யில இங்கிலீஷ் நியூஸ் சேனல் பார்க்கிற அளவுக்கு நம்மாளுங்க தேறி ரொம்ப நாளாச்சுடா!''

2 comments:

PrashV said...

ena panna, ruling party (Cong) has 41MPs and opposition (BJP) has 42 MPs with cases filed against them...

Prabu Natarajan said...

அட கேஸ் இருக்கற மேட்டர் இப்ப சப்ப மேட்டரா இல்ல ஆயி போச்சு. கேஸ் இருக்கற MP எல்லாம் பாவம் படிக்காத தற்குறிகள். ஆனா இப்ப என்ன நடக்குது நாட்டுல. நல்ல படிச்ச பயலுக அரசியலுக்கு வரனும் வரணும்னு சொல்லி இப்ப நல்ல படிச்ச (அதாவுது ஏற்கனவே பதவியில் இருகரவன்களோட பசங்க பேர புள்ளைங்க) பசங்க வந்தாங்க நல்ல high techa நாட்ட கொள்ளையும் அடிச்சுட்டாங்க!!

இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க !!! அப்படின்னு கேக்கற மாதிரியே ஒரு பீல்