07 June 2011

கடவுளின் மறதி


காய்ந்த பூமியில் கயிற்று கட்டிலிட்டு !!!!!

தனக்கு இருக்கும் பெருங்கவலைகளுக்கு மத்தியில்
கடவுள் இருக்கிறானா இல்லையா என்ற அருங்க்குழப்பதில்
சற்றே கண்ணயர்ந்து கனா கண்டான் ..........

வானம் பார்த்து வறண்ட பூமியில்
விவசாயம் நம்பி வறுமையில் வாடும்
வீணாய் போன விவசாயி !!!!!

படுத்த பத்தே நிமிடத்தில்
கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி...
கசங்கி போன அவன் முகத்தில்
சிலேன்று சாரலாய் பட்டது நீர்த்துளி!!!!!

கனவில் கூட காண முடியாத கடவுள் தான்
கடைசியில் மனமிறங்கி
மாரிதனை பொழிந்து விட்டதென எண்ணி
வராத நித்திரையை விருட்டென்று
கலைத்து விட்டு....
வேகமாய் எழுந்தவனுக்கு தெரியுமா.........

தன முகத்தில் பட்டு பரவசமாக்கியது
மழைத்துளி அல்ல........
கொடுத்த கடனை வட்டியோடு கேட்டு
சேட்டு துப்பிய
உமிழ்துளி என்று!!!!!!

மழைநீரை காணாத மரங்கள் எத்தனையோ
மண்ணில் வேர் விட்டு வாழ வழி இருக்க
ஏன் இந்த பாவப்பட்ட
விவசாயிக்கும்
அந்த வழியை காட்ட
மறந்து போனான்
கல்லாய் போன கடவுளடா......

பிரபு

No comments: