Helmet போட்டா மண்டைய பாதுகாக்கலாம்.
ஆனா ,
மண்டைய போட்டா helmetta பாதுகாக்க முடியுமா?
---------------------------------------------------------------------------------------------
முட்டை போடுற கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.
ஆம்லெட் போடுற நமக்கு முட்டை போடத் தெரியாது
---------------------------------------------------------------------------------------------
பஸ்ல நீ ஏறினாலும் ...பஸு உன்மேல் ஏறினாலும் ...
டிக்கெட் வாங்க போரதேன்னவோ நீ தான் .....
---------------------------------------------------------------------------------------------
டிக்கெட் வாங்கிட்டு உள்ள போறது சினிமா தியேடர்....
உள்ளே போய் டிக்கெட் வாங்கறது ஆபரேசன் தியேடர் ...
---------------------------------------------------------------------------------------------
சிற்பி கல்ல உலியால அடிச்சா அது "கலை"
ஆனா
நாம சிற்பிய உலியால அடிச்சா அது "கொலை"
---------------------------------------------------------------------------------------------
சன்டே ஆனா ஜாலியா சண்டை போடலாம்
ஆனா
மண்டே ஆனா ஜாலியா மண்டாயா போட முடியுமா ??
---------------------------------------------------------------------------------------------
டீ கப்புல டீ இருக்கும்
அப்ப
வோல்டூ கப்புல வோல்டூ இருக்குமா???????
---------------------------------------------------------------------------------------------
செருப்பு இல்லாம நாம நாடக்கலாம்,
ஆனா
நாம இல்லாம செருப்பு நடக்க முடியுமா???
---------------------------------------------------------------------------------------------
என்ஜீனியரிங் காலேஜ்லே படிச்சா நீங்க என்ஜீனியர் ஆக முடியும்.
ஆனா
பிரெசிடென்சி காலேஜ்லே படிச்சா பிரெசிடென்ட் ஆக முடியாது.
---------------------------------------------------------------------------------------------
வாழை மரம் தார் போடும்,
ஆனா
அதை வச்சு ரோடு போட முடியாது!
---------------------------------------------------------------------------------------------
பாஸ்போர்ட் ஸைஸ் போட்டோவ பாஸ்போர்ட்ல ஒட்டாலாம்
அப்ப
ஸ்ஸ்டாம்ப் ஸைஸ் போட்டோவ ஸ்டாம்பில ஓட்ட முடியுமா??
---------------------------------------------------------------------------------------------
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும் ,
கழித்தல் கணக்கு போடும்போது,
கடன் வாங்கித்தான் ஆகனும்.
---------------------------------------------------------------------------------------------
கொலுசு போட்டா சத்தம் வரும்.
ஆனா,
சத்தம் போட்ட கொலுசு வருமா ?
---------------------------------------------------------------------------------------------
பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
இதுதான் உலகம்
---------------------------------------------------------------------------------------------
T Nagar போனா டீ வாங்கலாம்.
ஆனால்
விருது நகர் போனா விருது வாங்க முடியுமா ?
---------------------------------------------------------------------------------------------
என்னதான் பெரிய வீரனா இருந்தாலும்,
வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது.
---------------------------------------------------------------------------------------------
இளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு.
அதுக்காக,
இளநீர்ல போர் போடவும் முடியாது , பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .
---------------------------------------------------------------------------------------------
உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .
---------------------------------------------------------------------------------------------
ஓடுற எலி வாலை புடிச்சா நீ 'கிங் 'கு
ஆனா...
தூங்குற புலி வாலை மிதிச்சா உனக்கு சங்கு.
---------------------------------------------------------------------------------------------
அரியர் வைத்தோர் அறிவுடயார்
அறிவிலார்ஆல் கிலியர் செய்பவர்.
படிப்பவரை கண்டால் வயிர் எரிபவர் சங்கம்...
---------------------------------------------------------------------------------------------
மேல இருந்து கீழே விழுந்தா அருவி..
கீழே இருந்து மேலே பறந்தா குருவி
---------------------------------------------------------------------------------------------
பாம்பு எத்தனை தடவை படம் எடுத்தாலும்
அதால
ஒரு தடவை கூட தியேட்டர்ல ரீலீஸ் பண்ண முடியாது
---------------------------------------------------------------------------------------------
பாங்க் ல பணம் போடலாம்.
ஆனா
பணத்துல பாங்க் க போட முடிஉமா?
---------------------------------------------------------------------------------------------
ஸ்விட்ச் போட்டா பேன் சுத்தும்
ஆனா
பேன் போட்டா ஸ்விட்ச் சுத்துமா????
---------------------------------------------------------------------------------------------
தீ குட்சீய உரசுணா தீ வரும்...
ஆனா
தீ யை உரசுணா தீ குட்சீ வருமா ?
---------------------------------------------------------------------------------------------
பவர் பெயிலிருக்கும் லவ் பெயிலிருக்கும்என்ன வித்யாசம்?
பவர் பெயிலியர் ஆனா, வீடு இருட்டாகும்
லவ் பெயிலியர் ஆனாலோ, வாழ்க்கை வெளிச்சமாகும்
---------------------------------------------------------------------------------------------
உடம்புல சுகர் இருந்தாலும் டேஞ்சர்,
மனசுல பிகர் இருந்தாலும் டேஞ்சர் ....
என்ன நான் சொல்றது....
---------------------------------------------------------------------------------------------
காதலி என்பவள் பாட்டி சுட்ட வடை மாதிரி.
ஒழுங்கா பாத்துக்கலேன்னா....
காக்கா தூக்கிட்டு போயிடும்....
---------------------------------------------------------------------------------------------
பாயாசத்தை நாலு நாள் வெச்சிருந்தா பாய்சன் ஆயிடும்.
ஆனா பாய்சனை நாலு நாள் வெச்சிருந்தா பாயாசம்
ஆயிடுமா?
.....யோசிங்க..... யோசிங்க......
---------------------------------------------------------------------------------------------
பிரஷ் பண்ணாத பல்லும்
மெசேஜ் அனுப்பாத செல்லும்
நல்ல இருந்ததா சரித்திரமே இல்ல...
---------------------------------------------------------------------------------------------
எக்ஸாம்ல ஃபெய்ல் ஆகிட்டா
திரும்ப படிச்சு பாஸ் பண்ணலாம்.
ஆனா,
பாஸ் ஆகிட்டா
திரும்ப படிச்சு ஃபெய்ல் ஆக முடியுமா?
---------------------------------------------------------------------------------------------
குளவி கொட்டினா வலிக்கும்.
தேள் கொட்டினா கூட வலிக்கும்.
ஆனா
முடி கொட்டினா வலிக்குமா?
(சில பேருக்கு மனசு வலிக்கும் அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது)
---------------------------------------------------------------------------------------------
நாம அடிச்சா அதுக்கு பேரு மொட்டை
தானா விழுந்தா அதுக்கு பேரு சொட்டை
இது எப்படி இருக்கு???
---------------------------------------------------------------------------------------------
என்னதான் ஜாவால Thread இருந்தாலும்
அத வச்சு லுங்கி கூட நெய்ய முடியாது.
---------------------------------------------------------------------------------------------
மின்னலைப் பார்த்தா கண்ணு போயிடும்..
பார்க்கலைன்னா மின்னல் போயிடும்.
---------------------------------------------------------------------------------------------
பவர் கிளாஸை,
என்னதான் ஃப்ரிட்ஜ்ல வச்சு எடுத்தாலும்
அது கூலிங் கிளாஸ் ஆகாது
---------------------------------------------------------------------------------------------
Tea மாஸ்டர் என்னதான் லைட்டா Tea போட்டாலும்
அதுலயிருந்து வெளிச்சம் வராது.
---------------------------------------------------------------------------------------------
அண்ணே..
விடிய விடிய டீவி ஓடினாலும்
அதால ஒரு இன்ச் நகர முடியுமா?
---------------------------------------------------------------------------------------------
சிவகாசிக்கும், நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம்?
சிவகாசியில காச கரியாக்குவாங்க!
நெய்வேலில கரிய காசாக்குவாங்க!!
nandri - வித்தியாச வித்தியாசமாக யோசிப்போர் சங்கம் (ISO 9001 Certified)
---------------------------------------------------------------------------------------------
பையி 'கட்'டானா தைக்கலாம்;
துணி 'கட்'டானாலும் தைக்கலாம்;
தோலு 'கட்'டானாகூட தைக்கலாம்;
ஆனா,கரன்ட் 'கட்'டானா தைக்க முடியுமா?
nadrikuriyavarkal - இருட்டுல உட்கார்ந்து யோசிப்போர் சங்கம்
---------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும்,
ஆனா
அமெரிக்காவை தொலைச்சது யாரு?
---------------------------------------------------------------------------------------------
ரிஸல்ட் நாளு தெரிஞ்சு போச்சுன்னா,
லீவு நாளு நரகம் ஆயிரும்.
சன்தோஷம்தாங்க முக்கியம்!!!-
பரிட்சை சரியா எழுதாம டயலாக் பேசி சமாளிப்போர் சங்கம்.
---------------------------------------------------------------------------------------------
ஓட்டýல் சாப்பிட்டுப் பணம் இல்லேன்னா
மாவு ஆட்டச் சொல்வாங்க.
ஆனா,
பேருந்தில் ஏறியபிறகு பணம் இல்லேன்னா,
பேருந்து ஓட்டச் சொல்வாங்களா?
---------------------------------------------------------------------------------------------
நாம சென்னை சிட்டியில வாழ முடியும்.
பெங்களூர் சிட்டியிலயும் வாழமுடியும்.
ஆனா, எலக்ட்ரிசிட்டியில வாழமுடியுமா?
---------------------------------------------------------------------------------------------
சிவாஜி படத்துல ரஜினி நடிக்க முடியும்.
ஆனா, இப்ப ரஜினி படத்துல சிவாஜி நடிக்க முடியுமா?
---------------------------------------------------------------------------------------------
ஒரு மாத்திரை சாப்பிட்டா தூக்கம் வரும்.
பத்து மாத்திரை சாப்பிட்டா...?
தூக்க ஆள் வரும்.
---------------------------------------------------------------------------------------------
தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
ஆனா
இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)
---------------------------------------------------------------------------------------------
ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்
---------------------------------------------------------------------------------------------
லவ்வர்ஸ் டே அன்னைக்கு லவ்வருக்கு முத்தம் கொடுக்கலாம்.
ஆனால்
டீச்சர்ஸ் டே அன்னைக்கு டீச்சரை முத்தமிட முடியுமா..?
---------------------------------------------------------------------------------------------
என்னதான் கருணாநிதி திமுக வானாலும்
அவர் வீட்டு மாடு
அம்மான்னு தான் கத்தும்
---------------------------------------------------------------------------------------------
என்ன தான் மீனுக்கு நீச்சல் தெரிஞ்சாலும் அதால குழம்புல
நீந்த முடியாதே !!
மெரினா பீச் மீன் வியாபாரிகள் சங்கம் சார்பாக